கடந்த 7.5 ஆண்டுகளில் உத்தரபிரதேச மாநிலத்தில் எஸ்டிஎஃப் 7,000 க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல் 49 குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் சுட்டு கொல்லப்பட்டதோடு, எஸ்டிஎஃப் 559 க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
யோகி ஆதித்யநாத் அரசு, 'ஜீரோ டாலரன்ஸ் என்கிற கொள்கை'யின் கீழ், மாநிலத்தில் குற்றம் மற்றும் குற்றவாளிகளைத் தொடர்ந்து அடக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உ.பி. எஸ்டிஎஃப் மாநிலத்தில் இருந்த கொடூரமான குற்றவாளிகள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஆயுதக் கடத்தல்காரர்கள், சைபர் கிரைம் குற்றவாளிகள் மற்றும் தேர்வு மோசடி கும்பல் ஆகியோருக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த ஏழரை ஆண்டுகளில், உத்தரபிரதேச எஸ்டிஎஃப்-ல் 7,000 க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளை கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல் 49 குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அதிக அளவிலான சட்டவிரோத ஆயுதங்கள், போதைப்பொருட்கள், தடைசெய்யப்பட்ட விலங்குகளின் தோல்கள் மற்றும் எலும்புகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. , எஸ்டிஎஃப் தனது புத்திசாலித்தனத்தால் 559 க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுத்து, குற்றவாளிகளின் திட்டங்களை முறியடித்துள்ளது.
559-க்கும் மேற்பட்ட கொலை, கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்பட்டன:
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நோக்கத்திற்கு ஏற்ப, மாநிலத்தில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை ஒடுக்குவதற்காக எஸ்டிஎஃப் தொடர்ந்து தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருவதாக, ஏடிஜி எஸ்டிஎஃப் அமிதாப் யாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர்... "கடந்த ஏழரை ஆண்டுகளில் மொத்தம் 7,015 குற்றவாளிகள் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளை எஸ்டிஎஃப் கைது செய்துள்ளது, அதே நேரத்தில் 49 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவர் மீதும் 10,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஜீரோ டாலரன்ஸ் கொள்கையின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக, 559 க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் மக்கள் பிரதிநிதிகள், பிரபலங்கள், பொது மக்கள் கடத்தல், கொள்ளை, கொலை போன்ற குற்றங்கள் அடங்கும். இதனுடன் 3970 சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
தேர்வுத் தாள்கள் கசிவில் ஈடுபட்ட 193 கும்பல்களைச் சேர்ந்த 926 தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில், தேர்வுகளில் மோசடி மற்றும் தேர்வுத் தாள்கள் கசிவு போன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், முற்றிலுமாக ஒழிக்கவும் கடந்த ஏழரை ஆண்டுகளில் எஸ்டிஎஃப் 193 கும்பல்களைச் சேர்ந்த 926 தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்டிஎஃபின் இந்த நடவடிக்கையால் இளைஞர்கள் மத்தியில் யோகி அரசு மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 379 சைபர் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்டவிரோத ஆயுதக் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதலில், 189 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2080 சட்டவிரோத துப்பாக்கிகளும், 8229 சட்டவிரோத தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. எஸ்டிஎஃப் சட்டவிரோத மது கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து மதுபானம் கடத்திய 523 மதுபானக் கடத்தல்காரர்களைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 80579 பெட்டி மதுபானம், 330866 லிட்டர் ரெக்டிஃபைட் ஸ்பிரிட் மற்றும் 7560 லிட்டர் தயாரிக்கப்பட்ட நாட்டு மதுபானம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளது.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 1083 பேர் கைது, 6.1 கிலோ பிரவுன் சுகர் பறிமுதல்
போதைப்பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதில் ஈடுபட்ட 1082 குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 91147.48 கிலோ கஞ்சா, 2054.651 கிலோ சரஸ், 19727.1 கிலோ கசகசா/ஓபியம், 7.06 கிலோ மார்பின், 723.758 கிலோ ஸ்மாக், 21.521 கிலோ ஹெராயின், 181.012 கிலோ அபின், 6.1 கிலோ பிரவுன் சுகர், 6.938 கிலோ மெத்தாடோன் மற்றும் 280899 தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக எஸ்டிஎஃப் துணை காவல் கண்காணிப்பாளர் தீபக் சிங் தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் போது, போதைப்பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே நேரத்தில், தடைசெய்யப்பட்ட வனவிலங்குகளை வேட்டையாடி, கடத்தும் பல்வேறு கும்பல்களைச் சேர்ந்த 170 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 341 கிலோ ஆமை ஓடுகள், 2 பல்லிகள், 1 புலித்தோல், 18 கிலோ புலி எலும்புகள், 2 யானை தந்தங்கள், 8011 ஆமைகள், 4922 தடைசெய்யப்பட்ட பறவைகள், 1 மான் எலும்புக்கூடு, 20 சாம்பல் நிற குரங்குகள், 1 சிறுத்தை தோல், 4.12 கிலோ அம்பர்கிரிஸ், 1 பல்லி செதில், 4 காட்டுப்பன்றி பற்கள், 563.1 கிலோ செம்மரம், 44 யானை தந்தங்களால் செய்யப்பட்ட பொருட்கள், 25 சிறுத்தை பற்கள், 24 சிறுத்தை நகங்கள், 110 நரி கொம்புகள், 140 சந்தன மரங்கள், 1 புலி எலும்புக்கூடு, 1 மலைப்பாம்பு மற்றும் 1 பாம்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், ரொக்கம் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த காலகட்டத்தில், எஸ்டிஎஃப் மொத்தம் 2670 பாராட்டத்தக்க பணிகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.