India@75 : இறுதிகட்டத்தை எட்டிய ஏசியாநெட் நியூஸ் & NCC-யின் வஜ்ர ஜெயந்தி யாத்திரை!

By Dinesh TG  |  First Published Aug 8, 2022, 9:05 PM IST

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் மற்றும் என்.சி.சி இணைந்து நடத்தும் வஜ்ர ஜெயந்தி யாத்திரை புதுடெல்லியை அடைந்து அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  ஆசாதி கா அம்ரித் மஹோத்சவை NCC உடன் இணைந்து ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் பெருமை கொள்கிறது. கடந்த 75 ஆண்டுகளில் நமது தேசத்தின் மாபெரும் சாதனைகளை இந்த யாத்திரை பிரதிபலிக்கிறது, மேலும் சுதந்திர இந்தியா 100 வயதை எட்டும்போது நாடு எங்கு இருக்க வேண்டும் என்பதற்கான வரைபடத்தை உருவாக்க உதவியுள்ளது


ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் மற்றும் என்சிசி இணைந்து நடத்தும் வஜ்ர ஜெயந்தி யாத்ரையில், 150 NCC கேடட்கள் நாட்டின் முக்கியமான வரலாற்று இடங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் தேசம் முழுவதிலும் உள்ள சிறந்து விளங்கும் முக்கிய மையங்கள் வழியாக பயணித்து, புதுடெல்லியில் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளனர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏசியாநெட் நியூஸ் மற்றும் என்சிசி இணைந்து 'வஜ்ர ஜெயந்தி யாத்திரையைத் தொடங்கியுள்ளன. நாட்டின் சுதந்திரப் போராட்ட நினைவுச் சின்னங்கள், ராணுவ தளங்கள், விவசாயம், கலாச்சாரம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையங்களை ஆராய்ந்து ஒரு பெரிய தொடக்கமாக 20 என்சிசி கேடட்களுடன் இந்த யாத்திரையை தொடங்கியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையை கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, இந்த யாத்திரை கார்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு வந்தடைந்தது. தொடர்ந்து பெங்களூரில் ராஜ்பவனில், India@75 கர்நாடகா கொடியேற்ற விழா நடைபெற்றது. அதில், கர்நாடக மாநில ஆளுநர் தவர்சந்த் கெலாட் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். தற்போது, கர்நாடகாவில் பயணத்தை முடித்துவிட்டு அடுத்த மாநிலங்களுக்குள் நுழைவதற்கான யாத்திரையின் கொடியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் ஒப்படைத்தார். பயணத்தில் பங்கேற்ற என்சிசி கேடட்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

Tap to resize

Latest Videos

தொடர்ந்து பயணித்த என்சிசி குழுவினர் இறுதியாக டெல்லி வந்தடைந்தனர். டெல்லி ராஜ்காட் அருகே சத்தியாகிரக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார் கலந்துகொண்டார். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கல்ரா மற்றும் என்சிசி டைரக்டர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் எக்ஸிகியூட்டிவ் சேர்மன் ராஜேஷ் கல்ரா பேசுகையில், "இந்த யாத்திரை 'பிரச்சின் பாரத்' முதல் 'நவபாரத்' என்று கருப்பொருளாக கொண்டு தொடங்கபட்டது. இதற்காக என்சிசி-யிடமிருந்து உதவியைப் பெற்றதற்கு நாங்கள் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளோம். நாடு முழுவதிலும் உள்ள தலைமையகம், உள்ளூர் NCC பிரிவுகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இதை செய்ததற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி கூறுகிறேன் என்றார்.

"இந்த என்சிசி குழுவினர், இந்த யாத்திரையின் மூலம் கற்றுக்கொண்டதை தங்கள் வீடுகளுக்குத் திரும்பி நண்பர்களிடையே செய்தியைப் பரப்புவார்கள் என்று நம்புகிறேன் என்றும் நாட்டின் வளர்ச்சிக்கு ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார். மேலும், நாங்கள் மிகவும் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறோம் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்," என்றும் ராஜேஷ் கல்ரா தெரிவித்தார்.

நம் வரலாற்றின் முக்கிய தருணம் ''ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்''

தொடர்ந்து பேசிய பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார், "என்.சி.சி மிகப்பெரிய சீருடை அமைப்பு மட்டுமல்ல, மிகவும் திறமையான இளைஞர் அமைப்புகளில் ஒன்று என்று கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நமது வரலாற்றில் இந்த சிறந்த நிகழ்ச்சியை நடத்திக்கொடுக்கும் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கிற்கு தான் நன்றி சொல்வதாக தெரிவித்தார். மேலும், ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்பது நமது வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என்றும் நாம் அடைந்த இடத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, நாம் பெருமைப்படக்கூடிய வகையில் பல்வேறு முன்னேற்றங்களைச் செய்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்."

இது ஒரு ஆரம்பம் என்று தெரிவித்த அஜய் குமார், இந்த புதிய இந்தியா உண்மையில் இளைஞர்களால் வடிவமைக்கப் போகிறது என்றார், இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை வடிவமைப்பதில் என்சிசி குழுவினர் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள்," என்றும் அவர் தெரிவித்தார்.

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர் மேற்கொண்ட இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும் என்றும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எதிரொலிக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார் தெரிவித்தார்.

click me!