காந்தியக் கொள்கைகள் மற்றும் இந்தியா தொடர்பான இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினார். இந்தியா வர முடிவு செய்த தருணத்தில் அசைவ உணவு சாப்பிடுவதையும் மது அருந்துவதையும் நிறுத்தினார்.
இங்கிலாந்தில் ஒரு உயர்குடி குடும்பத்தில் பிறந்த மேட்லைன் ஸ்லேட், குதிரை சவாரி மற்றும் பீத்தோவனின் இசையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு தனது குடும்பத்தின் ஆடம்பர வாழ்க்கையை விட்டுவிட்டு இந்தியாவை தனது வீடாக மாற்றிக்கொண்டார். காந்தி அவரை தனது மகளாக ஏற்றுக்கொண்டு அவரது பெயரை ‘மீரா பென்’ என்று மாற்றினார். மீரா பென் மகாத்மா காந்தியைப் பற்றி பிரெஞ்சு எழுத்தாளர் ரோமெய்ன் ரோலண்டிடம் இருந்து தெரிந்து கொண்டார்.
இதற்குப் பிறகு அவர் காந்தியக் கொள்கைகள் மற்றும் இந்தியா தொடர்பான இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினார். இந்தியா வர முடிவு செய்த தருணத்தில் அசைவ உணவு சாப்பிடுவதையும் மது அருந்துவதையும் நிறுத்தினார். தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து இந்தி கற்க ஆரம்பித்தார். இந்தியா வர விருப்பம் தெரிவித்து காந்திக்கு கடிதம் எழுதிய அவர், 20 பவுண்ட் காசோலையையும் அனுப்பினார். ஆனால் காந்தி அவரை உடனடியாக இந்தியா வருமாறு அழைக்கவில்லை.
காந்தி அந்த கடிதத்திற்கு பதிலளித்து, ‘இன்னும் ஒரு ஆண்டு கழித்தும், நீங்கள் இந்தியாவுக்கு வர விரும்பினால், நீங்கள் இந்தியாவுக்கு வருவதற்கு அதுவே சரியான நேரம்’ என்று எழுதினார். இதன் பிறகு மீரா பென் 1925 ஆம் ஆண்டு தனது 33 வயதில் இந்தியா வந்தார். மகாத்மா காந்தி பயணம் தொடர்பாக வெளியில் செல்லும்போது, அவரது பிரிவு மீரா பென்னை வருத்தியது. அவர் ஒரு நாளைக்கு 3-4 முறை மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதுவார். அவர் காந்தியின் புத்தகங்களுக்கு பிழை சரிபார்ப்பு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அவர் புடவை உடுத்த ஆரம்பித்தவுடன் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதாக சபதம் செய்து தலையை மழித்துக்கொண்டார். ஆனால், அவர் நாற்பது வயதை எட்டியபோது, ஆசிரமத்திற்கு வந்திருந்த புரட்சியாளர் பிருத்வி சிங்கின் பால் ஈர்க்கப்பட்டார். மீரா பென் விரும்பினால் பிருத்வி சிங்கைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று காந்தி கூறினார். ஆனால், மீரா பென் அதற்கு மறுத்துவிட்டார். மகாத்மா காந்தியின் உடல்நிலையை கவனித்துக்கொண்ட மீரா பென் அவருக்கு பழங்கள் மற்றும் ஆட்டுப்பால் கொடுப்பதோடு கூடவே அவரது ரத்த அழுத்தத்தையும் பரிசோதித்து வந்தார்.
மீராபென் தன் மீது காட்டும் உரிமையுள்ள நடத்தையைப் பார்த்த காந்தி, காதியின் விளம்பரத்திற்காக அவரை நாடு முழுவதும் பயணம் செய்ய அனுப்பினார். ஒத்துழையாமை இயக்கத்தின் போது மீரா பென் சிறைக்குச் சென்றார். திருமணமான தம்பதிகள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பது குறித்தும், அவருக்கும் காந்திக்கும் இடையே நிறைய விவாதங்கள் நடந்தன. திருமணமான தம்பதிகள் கூட ஆசிரமத்தில் வசிக்கும் போது பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது காந்தியின் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களில் ஒன்றாகும்.
இருப்பினும் குழந்தைகளைப் பெற அனுமதி இருந்தது. மகாத்மா காந்தி பல ஆண்டுகளாக அதைப் பின்பற்றி வந்தார். ஒரு ஆங்கிலேயப் பெண்மணி, காந்தியைப் பின்தொடர்வதை ஆங்கிலேயர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதன் காரணமாக அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். காந்தியின் மறைவுக்குப் பிறகு அவரால் இந்தியாவில் இருக்க முடியவில்லை. நேருவுக்கும் கடிதம் எழுதி, இந்தியாவில் அதிகரித்து வரும் ஊழல் பற்றிக்குறிப்பிட்டார். 1959 இல் அவர் வியன்னாவுக்கு குடிபெயர்ந்தார். இந்திய அரசு இவருக்கு 1982 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. அதே ஆண்டில் அவர் காலமானார்.