India @ 75: இந்திய கலைத் துறையின் தந்தை அபானி தாக்கூர்...!

By Kevin KaarkiFirst Published Jun 23, 2022, 11:48 AM IST
Highlights

இந்தியாவின் நவீன கலைத் துறையின் தந்தையாக பார்க்கப்படுகிறார். கலைத் துறையில் சுதேசி மதிப்புகளின் முதல் ஆதரவாளர் இவர்.

இந்திய தேசியவாதத்திற்கு பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவம் உள்ளிட்டவை அடித்தளமாக விளங்கின. வாழ்க்கையின் அனைத்து பிரிவுகளிலும் ஏற்பட்ட சுய விழிப்புணர்வு காரணமாக காலனித்துவத்துக்கு எதிராக இந்திய எதிர்ப்பு இயக்கம் துவங்கப்பட்டது. இது அரசியல் மட்டும் இன்றி கலை மற்றும் இலக்கிய துறையிலும் பிரதிபலிக்கத் துவங்கியது. அபனிந்திரநாத் தாக்கூர் அல்லது அபானி தாக்கூர் (1871-1951) கலைத் துறையில் புதிதாக தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தாக்கூர் குடும்பத்தை சேர்ந்தவரான இவர் அரசியல், கல்வி, இலக்கியம் மற்றும் கலை உள்ளிட்ட பிரிவுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி இருக்கிறார். ரவீந்திரநாத் தாக்கூரின் உறவினரான இவர், இந்தியாவின் நவீன கலைத் துறையின் தந்தையாக பார்க்கப்படுகிறார். கலைத் துறையில் சுதேசி மதிப்புகளின் முதல் ஆதரவாளர் இவர். இவர் ஐரோப்பிய கலையின் ஆதிக்கத்திற்கு மாற்றாக இந்திய கலையை உலகறிய செய்தவர் ஆவார்.

இந்தியாவுக்கே உரித்தான முகலாய மற்றும் ராஜ்புட் மினியேச்சர் கலை மற்றும் பாரம்பரியத்தை மீண்டும் கண்டெடுக்கச் செய்ததில் முக்கிய பங்கு வகித்தார். இவர் அவற்றை கண்டறிந்து, மீட்டு இந்திய சிறப்பு மற்றும் அஜந்தா குகைகளை வரைந்தார்.   

தாக்கூரின் அன்மை கிராமம் ஜொராஷான்கோவில் 1871 ஆண்டு அபானி பிறந்தார். இவர் கல்கட்டா கலை பள்ளியில் ஐரோப்பிய ஆசிரியர்களிடம் இருந்து கலையை கற்றுக் கொண்டார். முகலாய கலை வடிவங்களை பார்த்த பின், அதே போன்ற ஸ்டைலில் தானும் வரைய வேண்டும் என முடிவு செய்து அதையே தொடர்ந்தார். இவர் ரவீந்திரநாத் தாக்கூரின் எழுத்துக்களை வடிவமைத்தார். ப்ரிடிஷ் கலை ஆசிரியர் இ.பி. ஹாவெல் அரசு கலை பள்ளியின் தலைவராக வந்தது அபானி இந்திய பாரம்பரியத்தை  மீட்டெடுக்க உதவியது.

இந்திய பாரம்பரியம் சார்ந்த கலை பயிற்சி மற்றும் தொழில்முறைகளை ஹாவெல், அபானி மற்றும் அவரின் சகோதரர் கஜேந்திரநாத் தாக்கூர் மறு உருவாக்கம் செய்தனர். இவர்கள் இந்தியன் சொசைட்டி ஆஃப் ஓரியன்டல் ஆர்ட்-ஐ உருவாக்கினர். இதுவே பெங்கால் ஸ்கூல் ஆப் ஆர்ட் என அழைக்கப்படுகிறது. நந்தலால் போஸ் மற்றும் ஜாமினி ராய் ஆகியோர் இவர்களிடம் கலையை கற்றுக் கொண்டு தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டனர். 

தனது கலை வடிவங்களில் ஜப்பான் மற்றும் சீன கலை நுனுக்கங்களை பயன்படுத்தி ஆசிய கலை பாரம்பரியத்தை அபானி கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டார். மேற்கத்திய கலை வடிவ முறைகளுக்கு எதிராக இந்திய பாரம்பரியத்தை ஆன்மீக வடிவில் வெளிப்படுத்த இந்த பள்ளி முயற்சி செய்தது. அதிக பெயர் புகழ் உள்ளிட்டவைகள் மட்டும் இன்றி சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற நிறுவனமாக பெங்கால் பள்ளி இருந்தது.  

click me!