ஆரம்பத்தில் கட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தான்.. கடைசி அடித்து நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ்..!

Published : Jul 04, 2019, 07:28 PM IST
ஆரம்பத்தில் கட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தான்.. கடைசி அடித்து நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ்..!

சுருக்கம்

உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 312 என்ற சவாலான இலக்கை வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்துள்ளது.

 உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 312 என்ற சவாலான இலக்கை வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்துள்ளது.  

இங்கிலாந்தில் 12-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடர் தோல்வியை அடுத்து அரையிறுதி வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுனில் அம்ரிஸ், ஷனான் கேப்ரியல் நீக்கப்பட்டு எவின் லீவிஸ், கீமர் ரோச் சேர்க்கப்பட்டனர். ஆப்கானிஸ்தான் அணியில் ஹமித் ஹாசன், ஹஷ்மதுல்லா ஷஹிதிக்கு பதிலாக தவ்லத் ஜத்ரன், சையது ஷிர்ஜாத் தேர்வாகினர். 'டாஸ்' வென்ற விண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெய்ல் (7) ஏமாற்றினார். பின் இணைந்த எவின் லீவிஸ் (58), ஷாய் ஹோப் (77) அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தனர். ஷிம்ரன் ஹெட்மயர் (39) நிலைக்கவில்லை. நிக்கோலஸ் பூரன் (58) தன்பங்கிற்கு அரைசதமடித்தார். கேப்டன் ஹோல்டர் (45) ஓரளவு தாக்கு பிடித்தார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 311 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்மியான ஸ்கோருக்கு ஆல் அவுட்டான டாப் 10 அணிகள்: இந்தியாவும் பட்டியல்ல இருக்கு!
IPL 2022: நீ விக்கெட் எடு.. நான் ஃபோட்டோ எடுக்குறேன்..! சாஹல் - தனஸ்ரீ ஜோடியின் அலப்பறை