அவங்க 2 பேருமே வேண்டாங்க.. நம்ம ஆள 4ம் வரிசையில் இறக்குங்க.. சும்மா தெறிக்கவிட்ருவாரு.. ஹர்பஜன் அதிரடி

By karthikeyan VFirst Published May 30, 2019, 10:56 AM IST
Highlights

நான்காம் வரிசையில் யாரை இறக்குவது என்பது தொடர்பான கருத்துகளை முன்னாள் வீரர்கள் இன்னும் தெரிவித்துவருகின்றனர். விஜய் சங்கர் அல்லது ராகுல் 4ம் வரிசையில் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே இரண்டு பயிற்சி போட்டிகளிலும் கேஎல் ராகுல் 4ம் வரிசையில் இறக்கப்பட்டார். 

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியோ அல்லது விராட் கோலி தலைமையிலான இந்திய அணியோதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டும் வலுவாக இருந்தது. மிடில் ஆர்டர் தான் சொதப்பலாக இருந்தது. ஆனால் தோனி ஃபார்முக்கு திரும்பி போட்டிக்கு போட்டி தெறிக்கவிடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தோனி அபாரமாக ஆடிவருகிறார். 

நான்காம் வரிசையில் யாரை இறக்குவது என்பது தொடர்பான கருத்துகளை முன்னாள் வீரர்கள் இன்னும் தெரிவித்துவருகின்றனர். விஜய் சங்கர் அல்லது ராகுல் 4ம் வரிசையில் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே இரண்டு பயிற்சி போட்டிகளிலும் கேஎல் ராகுல் 4ம் வரிசையில் இறக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சொதப்பினாலும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்தார். இதன்மூலம் நான்காம் வரிசைக்கு விஜய் சங்கருடனான போட்டியில் தனக்கான இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார்.

எனவே ராகுல் தான் நான்காம் வரிசையில் இறக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஆட்டத்தின் சூழலை பொறுத்துத்தான் நான்காம் வரிசை வீரர் களமிறக்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. அதனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யார் வேண்டுமானாலும் நான்காம் வரிசையில் இறக்கப்படலாம். 

உலக கோப்பை தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் நான்காம் வரிசை குறித்து இன்னும் கருத்து தெரிவித்துவருகின்றனர். வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் தோனி அபாரமாக ஆடி சதமடித்தார். தோனியின் பேட்டிங் வேற லெவலில் இருந்தது. பழைய தோனியை அந்த போட்டியில் பார்க்க முடிந்தது. 

இந்நிலையில் தோனியைத்தான் நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், 4ம் வரிசைக்கு விஜய் சங்கர் கண்டிப்பாக வேண்டாம். விஜய் சங்கரை விட ராகுல் நல்ல சாய்ஸ்தான். ராகுல் அபாரமாக ஆடுகிறார். அவர் ஷாட்டுகளை ஆடும்போது, அவரது முழு கவனமும் பந்தின் மீதே உள்ளது. பலவிதமான ஷாட்டுகளை ராகுல் ஆடுகிறார். ஆனால் அவரது தலை தடுமாற்றமே அடைவதில்லை. மிகத்தெளிவாகவும் முழு கவனத்துடனும் அடித்து ஆடுகிறார். 

ஆனாலும் யார் 4ம் வரிசைக்கு சரியான வீரர் என்று கேட்டால், நான் தோனியைத் தான் சொல்வேன். தோனி 6 அல்லது 7ம் வரிசையில் இறங்கி ஃபினிஷ் செய்யும் வேலையையே செய்துவருகிறார். ஆனால் தற்போது அவர் அபாரமான ஃபார்மில் சிறப்பாக ஆடிவருகிறார். எனவே தோனியை 4ம் வரிசையில் இறக்கினால் எந்த பவுலரையும் அடித்து நொறுக்கி சிக்ஸர்களை பறக்கவிடும் திறமையும் அனுபவமும் அவரிடம் இருக்கிறது. அதனால் 4ம் வரிசையில் தோனியை இறக்கலாம் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார். 
 

click me!