Proper Sleep: முறையான தூக்கம் இல்லையெனில் பெண்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும்!

By Dinesh TGFirst Published Dec 12, 2022, 10:13 PM IST
Highlights

பெண்கள் உரிய நேரத்தில் தூங்கவில்லை என்றால், பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும், இதற்கு நாம் அடிக்கடி பயன்படுத்தும் மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள் தான் மிக முக்கிய காரணமாக அமைகிறது

நாம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட சத்தான உணவுகள் மட்டும் போதாது. இதைத் தவிர்த்து போதுமான அளவு தூக்கமும் அவசியம் தேவை. ஒருவர் குறைந்த நேரம் மட்டுமே தூங்கினால், நிச்சயமாக அது அவருடைய ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆகவே, அனைவருக்குமே முறையான தூக்கம் அவசியம் தேவை. அதிலும், சிலர் இரவில் தாமதமாக தூங்குவதும் உண்டு. இதுவும் தவறான செயல். குறிப்பிட்ட நேர்த்திற்குள் இரவு உணவை முடித்து விட்டு, சிறிது நேரம் கழித்து தூங்க வேண்டும். சரியான நேரத்தில் தூங்கவில்லை என்றால், ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படும். 

தூக்கமின்மை

குறிப்பாக பெண்கள் உரிய நேரத்தில் தூங்கவில்லை என்றால், பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும், இதற்கு நாம் அடிக்கடி பயன்படுத்தும் மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள் தான் மிக முக்கிய காரணமாக அமைகிறது. இந்த சாதனங்களில் இருந்து வரும் நீல நிற ஒளியின் காரணமாக மெலடோனின் சுரப்பு தடைபடுகிறது. இதன் காரணமாகத் தான் இரவு நேரங்களில் பெரும்பாலான நபர்களுக்கு தூக்கமின்மை ஏற்பட்டு விடுகிறது. இதனைத் தொடர்ந்து முறையாக தூங்கவில்லை என்றால் உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் என பல விதமான பிரச்சனைகள் ஏற்படும். ஆகையால் செய்ய நினைக்கும் வேலைகள் அனைத்தும் தடைபடும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அவ்வகையில் இரவில் முறையான தூக்கம் இல்லை எனில், நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்னவென்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

தூக்கமில்லை எனில் என்ன நடக்கும்?

  • இரவில் தூக்கம் வரவில்லை என நாம் புலம்புவதற்கு முன்பாக, எந்த நேரத்தில் நாம் உறங்கச் செல்கிறோம் என்பதை பொருத்து தான் இருக்கிறது இரவுத் தூக்கம்.
  • நாம் உரிய நேரத்திற்கு தூங்கச் செல்லவில்லை எனில், மூளைக்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, பிறகு தூக்கம் நிறைவானதாக இருக்காது.
  • பொதுவாக சில பெண்களுக்கு கருத்தரித்தல் பிரச்சனை இருக்கும். இதற்கு தூக்கம் மிக முக்கிய காரணமாக அமைகிறது. சரியான நேரத்தில் தூங்கச் செல்வது எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
  • முறையாக தூங்காத நேரத்தில், இருள் சூழ்ந்திருக்கும் சமயத்தில் நமது உடலில் சுரக்கும் மெலடோனின் எனும் ஹார்மோன் சுரப்பது கணிசமாக குறைந்து விடும்.
  • பெண்கள் முறையாக தூங்காத போது, கருத்தரித்தல் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஹார்மோன்கள் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்து விடும்.
  • மேலும், தூக்கமில்லை என்றால், பெண்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதும் மிகக் கடினமாக இருக்கும். ஏனெனில் உடலில் பெரிதாக புத்துணர்ச்சி என்பதே இருக்காது. எந்நேரமும் சோர்வாகவே காணப்படுவார்கள். 
  • தூக்கம் சரியாக இல்லாத போது, இனப்பெருக்கத்திற்குத் தேவையான ஈஸ்ட்ரோஜன், மற்றும் ப்ரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்கள் சீரற்ற நிலையை அடைந்து விடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் கணவருடன் உறவில் ஈடுபடுவதும் கடினமாக இருக்கும்.
click me!