கண்களை வைத்தே ஒருவரின் ஆரோக்கியத்தை கணிக்கலாம். எப்படி? இப்படி...

First Published Mar 31, 2018, 1:30 PM IST
Highlights
With the eyes you can calculate one health. How? This ...


கண்களை வைத்தே ஒருவரின் ஆரோக்கியத்தை கணிக்கலாம்...

1.. கண்களில் நிரந்தர கட்டி 

கண்களில் நிரந்தர கட்டி இருந்தால் சிலருக்கு கண்களுக்கு கீழே கட்டி இருக்கும். அது சில நாட்களில் சரியாகிவிடும். அது பிரச்சனையல்ல! நிரந்தரமாக ஒருவருக்கு கட்டி இருந்தால் Sebaceous Gland Carcinoma என்னும் தோல் நோய் சம்மந்தமான அறிகுறி ஆகும். 

2.. கண் இமை உதிர்தல்

வயது முதிர்வு, மன அழுத்தம், ஊட்டசத்து குறைபாடு போன்ற பல காரணம் கண் இமை உதிர்தலுக்கு இருக்கலாம்.  ஆனால், இன்னொரு முக்கிய காரணம் தைராய்டு சுரப்பிக் குறைபாடாகும்! உடனே மருத்துவரை அணுகி தைராய்டு சம்மந்தமான அலோசனைகள் பெறுவது நல்லது. 

3.. மங்கலான பார்வை

இந்த பிரச்சனை தற்போது எல்லா வயதினருக்கும் வருகிறது. கணினி, செல்போன் போன்ற சாதனங்களை தொடர்ந்து பார்த்தால் கண் எரிச்சல், மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகள் வரும். இதற்கு உடனே மருத்துவரை அணுகுவது நலம். இல்லையென்றால் வேறு பிரச்சனைகள் வரலாம்.

4.. இள மஞ்சள் நிற கண்கள் 

கண்களின் நிறம் மஞ்சளாக இருந்தால் அது மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாகும். அதுமட்டுமின்றி பித்தப்பை நாளங்களில் எதாவது பிரச்சனை இருந்தால் கூட கண்கள் நிறம் மஞ்சளாக இருக்கும். 

5.. கண்கள் மேகமூட்டமாக தெரிந்தால் 

கண்கள் மேகமூட்டமாக தெரிந்தால் இந்த அறிகுறி நீரிழிவு நோயளிகளுக்கு தான் முக்கியமாக தோன்றும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் மருத்துவ பரிசோதனை குறிப்பிட்ட கால அளவில் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஏனென்றால் இது கண்களின் ரெட்டினா (retina) வை பாதிக்கும். பார்வை குறைதல் பார்வை குறைபாடோ அல்லது ஒன்றுமே தெரியாமல் போனாலோ தாமதிக்காமல் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். காரணம் இது பக்கவாதம் வருவதற்கான முக்கிய அறிகுறியாகும்.

click me!