கால் வெடிப்புகள் எதனால் வருகிறது? அதனை போக்க என்ன செய்யலாம்?

Asianet News Tamil  
Published : Apr 26, 2017, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
கால் வெடிப்புகள் எதனால் வருகிறது? அதனை போக்க என்ன செய்யலாம்?

சுருக்கம்

What is the foot burst? What can you do to get it done?

ஏன் வருகிறது?

1.. கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும்.

2.. சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும்.

3.. சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை. இதனாலும் கால் வெடிப்புகள் வரும்.

கால் வெடிப்பைப் போக்கும் வழிகள்

1.. வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும்.

2.. நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் கால் வெடிப்பு மறையும்.

3.. கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகிய வற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.

4.. இரவில் கை பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரைக்கும் செய்யவும்.

5.. பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும்.

6.. ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.

7.. கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

8.. வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.

9.. மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்

10.. உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake