என்னென்ன சத்துகள் எந்தெந்த பழத்தில் நிறைந்துள்ளன: ஒரு சின்ன அலசல்…

 
Published : Mar 28, 2017, 01:57 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
என்னென்ன சத்துகள் எந்தெந்த பழத்தில் நிறைந்துள்ளன: ஒரு சின்ன அலசல்…

சுருக்கம்

What fruit is full of nutrients which a small gadget

புரோட்டீன் சத்துகள் நிறைந்த பழங்கள்

மனிதனின் தசைகளை உருவாக்குகின்ற புரோட்டின் சத்தைப் பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சைப் பழம், மாதுளம் பழம், வாழைப்பழம், நேந்திரம் பழம், பாதாம் பருப்பு முதலியவற்றிலிருந்து பெறலாம்.

கால்சியம் சத்துகள் நிறைந்த பழங்கள்…

எலும்புகளை உருவாக்குகின்ற அல்லது பலப்படுத்தக்கூடிய கால்சியம் சத்தை தக்காளிப்பழம், ஆரஞ்சுப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் சீரகம் முதலியவற்றிலிருந்து பெறலாம்.

இரும்பு சத்துகள் நிறைந்த பழங்கள்

ரத்தத்தை உற்பத்தி செய்கின்ற 'அயர்ன்' என்ற இரும்பு சத்தானது உள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சை, திராட்சை மற்றும் பிஸ்தாப்பருப்பு போன்றவைகள் ரத்தத்திற்கு இரும்பு சத்தினை அளிகின்றன.

பொட்டாசியம் சத்துகள் நிறைந்த பழங்கள்…

ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்ற பொட்டாசியம் சத்து வெள்ளரிக்காயில் 42.6% உள்ளது. இவற்றை உண்டாலே இச்சத்தானது கூடும்.

பாஸ்பரஸ் சத்துகள் நிறைந்த பழங்கள்

மூளை பலத்தை அதிகரிக்க இந்த பாஸ்பரஸ் நமக்கு அதிகளவில் உதவிபுரிகின்றன. பாதாம்பருப்பு, அக்ரோட்டுக் காயும், அத்திபழத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மூளையின் செயல்திறனை இவை அதிகரிக்கின்றன.

பாஸ்பரஸ் சக்தியுள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் பாதாம் பருப்பு போன்றவைகள் ஆகும்.

ஆப்பிள் வாங்க முடியாதவர்கள் தான் நம்நாட்டில் அதிகம் அவர்கள் தினசரி இரவு படுக்கும் முன்பு பேரீச்சம்பழத்தை (10 முதல் 20) உண்டு பால் அல்லது சுத்த நீரினை பருகினால் மனபலத்தினை அதிகரிக்க செய்யும் மற்றும் மூளைக்கு பலத்தை தரும்.

மூளைக்கு தேவையான அணுக்களையும் தாதுவினையும் பாஸ்பரஸ் சக்தி உற்பத்தி செய்கின்றன. மூளைக்கு அதிகளவில் வேலைக் கொடுகின்றவர்களுக்கு, பாஸ்பரஸ் சக்தி அவசியம் தேவையாகும். சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மேடை பேச்சாளர்கள் பாஸ்பரஸ் அதிகமுள்ள பழங்களை உண்ணுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.

 

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க