மாதத்திற்கு மூன்று கிலோ வரை எடையை குறைக்கலாம் - நீங்கள் இந்த வழிகளை முறையாக பின்பற்றி நடந்தால்...

 
Published : Jan 04, 2018, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
மாதத்திற்கு மூன்று கிலோ வரை எடையை குறைக்கலாம் - நீங்கள் இந்த வழிகளை முறையாக பின்பற்றி நடந்தால்...

சுருக்கம்

Weight reduces up to three kilos per month - if you follow these steps properly ...

நம் அன்றாட வேலைகளை செய்யவும் உடல் உறுப்புகள் இயங்கவும் நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி, நாம் உண்ணும் உணவின் வாயிலாக கிடைக்கிறது. 

நாம் உட்கொள்ளும் உணவு, உடல் செலவிடும் சக்தியை காட்டிலும் அதிகமாகும் போது, உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது.

இவ்வாறு இந்த சேமிப்பு ஆண்டுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும்போது, உடல் எடை மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவே, உடல் எடை கூடுவதன் முதல் காரணம். மிகச் சிலருக்கு மட்டும் ஹார்மோன் காரணங்களால் உடல் எடையும், பருமனும் அதிகரிக்கின்றன. 

இந்த வழிமுறைகளை பின்பற்றி நடந்தால், குறைந்தது, மாதம் மூன்று கிலோ எடையை குறைக்கலாம். 

தினசரி கடைபிடிக்க வேண்டய உணவு முறைகள்:

1. காலை எழுந்தவுடன், 1 – 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

2. குறைந்தது, 35 நிமிடம் உடற் பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும்.

3. அப்போத தயாரித்த வெண் பூசணிச் சாறு அல்லது வாழைத்தண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.காபி,டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்)

4. காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை,3-4முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்ககரையைத் தவிர்ப்பது நல்லது.

5. காலை சிற்றுண்டி (8.00 – 9.00 மணிக்குள்): வெண்ணெய எடுத்த மோர் – 1 டம்ளர், அதனுடன் கொய்யா (சிறியது), பாலாடை கட்டடி அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு (4 துண்டு) வெஜிடபிள் ரொட்டி, சாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு.

6. மதிய உணவு (12.00 – 1.00 மணிக்குள்): 2 கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரையும், 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் (வெண்பூசணி, புடலங்காய்) பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல் கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காத இரண்டு கோதுமை சப்பாத்தி, ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர்.

7. இரவு உணவு (7.00 – 8.00 மணிக்குள்): வேக வைத்த காய்கறிகள் மூன்று கப் அல்லது சூப், பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது பைன் ஆப்பிள் (6 துண்டு) அல்லது கொய்யா 3 துண்டு.

8. பகலில் உறங்குவதை தவிர்ததல் நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்ககவும். உப்புள்ள ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும். இரவில் உண்ட பின் குறுநடை செய்த பிறகு உறங்க செல்லவும்.

PREV
click me!

Recommended Stories

Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!
Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க