எவ்வளவு முயற்சித்தும் எடையை குறைக்க முடியவில்லையா? இதோ இயற்கை ஹெல்த் ட்ரிங்க்…

 
Published : Mar 09, 2017, 04:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
எவ்வளவு முயற்சித்தும் எடையை குறைக்க முடியவில்லையா? இதோ இயற்கை ஹெல்த் ட்ரிங்க்…

சுருக்கம்

weight loss drink

தற்போது உடல் பருமன் எல்லோருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், உணவுகளில் கட்டுப்பாடு அவசியம். அதோடு கலோரிகள் நிறைந்த உணவுகள் உண்பதைக் குறைத்து, செரிமானத்தை மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அரிசி பால் கஞ்சியை ஒருவர் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால், அது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து, சிக்கென்ற உடலைப் பெற உதவும்.

அரிசி பால் கஞ்சியை எப்படி தயாரிப்பது என்றும், அதைக் குடிப்பதால் கிடைக்கும் வேறு சில நன்மைகள் இதோ…

தேவையான பொருட்கள்:

கைக்குத்தல் அரிசி – 1 கப்
தண்ணீர் – 8 கப்
சூரியகாந்தி எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 4 ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

* முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் அரிசியைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, மூடி வைத்து 15 நிமிடம் அரிசியை வேக வைக்க வேண்டும். சாதம் நன்கு வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் ஒரு பிளெண்டரை எடுத்து, அதில் இந்த சாதத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அத்துடன் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து, வேண்டுமானால் சிறிது பட்டை தூள் சேர்த்து கொண்டால், அரிசி பால் கஞ்சி தயார்!

 பயன்படுத்தும் முறை:

இந்த அரிசி பால் கஞ்சியை தினமும் 2 டம்ளர் குடிக்க வேண்டும். குறிப்பாக இதை காற்றுப்புகாத ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால், 2-3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

இந்த அரிசி பால் கஞ்சியைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…

  • இந்த கஞ்சியைக் குடித்தால், இதய பிரச்சனைகள், பக்கவாதம் போன்றவைகளின் தாக்கத்தைத் தடுக்கலாம். இதற்கு அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள் தான் காரணம்.
  • இந்த கஞ்சியினுள் உள்ள உட்பொருட்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைத் தூண்டி, உடலுக்கு ஓர் நல்ல பாதுகாப்பு கவசத்தை அளித்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
  • அரிசி பால் கஞ்சியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. மேலும் இதைக் குடித்தால், உடலால் உண்ணும் உணவுகளில் உள்ள வைட்டமின் சத்துக்களை எளிதில் உறிஞ்ச முடியும்.

PREV
click me!

Recommended Stories

Mookirattai Keerai : பவர்புல் கீரை 'அனைத்து' பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தரும் 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?
Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு