வழுக்கைத் தலைக்கு தீர்வு பாட்டி வைத்தியத்துல இருக்கு...

 
Published : Mar 17, 2017, 01:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
வழுக்கைத் தலைக்கு தீர்வு பாட்டி வைத்தியத்துல இருக்கு...

சுருக்கம்

Vaittiyattula grandmother to be a solution to the bald head

இன்றைய தலைமுறையினருக்கு வழுக்கைத் தலை பெரும் பிர்ச்சனை. இதற்கு தற்போதைய மோசமான பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணங்கள் என்பது அனைவருக்குமே தெரியும்.

இதற்காக எத்தனையோ எண்ணெய்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், நம் பாட்டி வைத்தியத்திற்கு இணையான தீர்வைப் பெற முடியாது.

இங்கு வழுக்கைத் தலையாவதைத் தடுக்கும் சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தலைமுடி உதிர்வதைத் தடுப்பதுடன், மயிர்கால்களை வலிமைப்படுத்தி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

#1 தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றி, அத்துடன் வெந்தயத்தை சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி, அந்த எண்ணெயை தொடர்ச்சியாக தலைக்கு தடவி வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.

#2 பூண்டை வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை தேன் கலந்து, வழுக்கை விழும் இடத்தில் தடவி வர, வழுக்கை விழுந்த இடத்திலும் முடி நன்கு வளருமாம்.

#3 சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

#4 பூண்டு பற்களை தட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்த பின் அந்த எண்ணெயால் ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 30 நிமிடம் கழித்து, ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வர, தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, வழுக்கை ஏற்படுவதும் தடுக்கப்படும்.

#5 செம்பருத்தி பூக்களை அரைத்து நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு கலந்து, அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி தடவி சில மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் முடி உதிர்வது குறைவதோடு, நரைமுடியும் தடுக்கப்படும்.

#6 நெல்லிக்காய் சாற்றில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க