இந்த வீட்டுப் பொருட்கள் பற்களை ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் மாற்றும்…

Asianet News Tamil  
Published : Oct 16, 2017, 02:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
இந்த வீட்டுப் பொருட்கள் பற்களை ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் மாற்றும்…

சுருக்கம்

use these things to get white teeth

 

இந்த வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினால் பற்கள் நன்கு ஆரோக்கியமாகவும், பளிச்சென்று வெண்மையுடனும் இருக்கும்.

கிராம்பு எண்ணெய்

ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

வேப்பங்குச்சி

பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.

பிரியாணி இலை

பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.

எலுமிச்சை

எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

கடுகு எண்ணெய்

பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

சாம்பல்

அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.

உப்பு

அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

வினிகர்

தினமும் வினிகரை நீருடன் சேர்த்து கலந்து வாயில் விட்டு, கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கி, பற்களில் உள்ள மஞ்சள் நிறக் கறையும் நீங்கும்.

PREV
click me!

Recommended Stories

Blood Sugar Alert: பழங்களை அதிகமாக சாப்பிட்டா சுகர் ஏறுமா? டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
Fatty Liver: ஃபேட்டி லிவர் பிரச்சனையா? கவலை வேண்டாம்... நீங்க சாப்பிடக்கூடிய 6 சூப்பர் ஸ்நாக்ஸ்!