துரியன் பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள்…

Asianet News Tamil  
Published : Nov 23, 2016, 04:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
துரியன் பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள்…

சுருக்கம்

துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பலமாக உள்ளது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆரோக்கியம் தரும் துரியன் பழம் பல உடல் சுகாதார நலன்களை கொண்டுள்ளது.

பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை கொண்டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல் படுகிறது. சில துரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது என கருத்தும் வெளியாகிறது..

உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை துரியன் பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் மற்றும் உயர்நிலை கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் கூறுகின்றனர். போதுமான அளவு துரியன் பழம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான உடல் நிலைக்கு மிகவும் நல்லது. துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்பு, ரிபோப்லாவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் அமிலம், வைட்டமின் சி, நார்ச்சத்து , துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் உள்பட பல சத்துகளை கொண்டுள்ளது.

வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் துரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற்றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது. துரியன் பழத்தின் சதை மஞ்சள் காமாலை நோயால் அவதி படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. துரியன் பழத்தின் வேர்கள் நகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்தாவும் பயன்படுகிறது-. துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு நிலையான இரத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

 

PREV
click me!

Recommended Stories

டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?