பல் சொத்தைக்கும், இன்ன பிறவற்றிற்கும் தீர்வு பேரிச்சை…

 
Published : Oct 27, 2016, 04:36 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
பல் சொத்தைக்கும், இன்ன பிறவற்றிற்கும் தீர்வு பேரிச்சை…

சுருக்கம்

நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா?

ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது. அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பார்போமா

மலச்சிக்கல்:

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இரவில் படுக்கும் போது பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை சாப்பிட்டால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். ஏனெனில் இந்த பழத்தில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சரிசெய்துவிடும்.

பார்வை கோளாறு:

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கர்ப்பம் :

கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

மூட்டு வலி:

இன்றைய காலத்தில் மக்கள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும். ஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.

குடல் கோளாறு பேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.

பற்சொத்தை :

நிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது.

 

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!