நமது முன்னோர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமா வாழ இந்த உணவுகள்தான் காரணம்…

First Published Apr 21, 2017, 1:32 PM IST
Highlights
This is the reason why our ancestors live long lasting health ...


1.. உளுந்துப் பொடி

தேவையானவை:

உளுத்தம் பருப்பு - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, சீரகம் - 5 கிராம், காய்ந்த கறிவேப்பிலை - 25 கிராம், ஓமம் - 10 கிராம், பெருங்காயம் - 5 கிராம்.

எப்படி செய்வது:

அனைத்துப் பொருட்களையும் பொன்னிறமாக வறுத்துப் பொடியாக அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை சாதத்தில் நெய் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

இதன் மருத்துவப் பயன்:

உடல் மெலிவானவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு சிறந்த ஊட்டச் சத்து உணவு.

சிசு வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களும் இதில் நிறைந்து இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றது.

கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.

2.. பிரண்டைத் துவையல்

தேவையானவை:

முற்றாத பிரண்டை - 50 கிராம், மிளகு - 20, பச்சை மிளகாய் - 3, உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய்விட்டு வதக்கவும். பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

இதன் மருத்துவப் பயன்:

குடலில் உள்ள கிருமி கள் நீங்கும்.

உடற்பருமன் குறையும்.

நரம்புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குணமாகும்.

மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.

3.. வெந்தயக் கீரை தோசை

தேவையானவை:

தோசை மாவு - அரை கிலோ, சீரகம் - 25 கிராம், சோம்பு - அரை தேக்கரண்டி, பூண்டு - 4 பல், வெந்தயக் கீரை - 100 கிராம், எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் - சிறிதளவு.

செய்முறை:

சீரகம், சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கிக்கொள்ளவும். சூடு ஆறியதும் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் உப்பு சேர்த்து தோசை மாவுடன் நன்றாகக் கலக்கி, தோசை வார்க்கவும். அதன் மேல் நறுக்கிய வெந்தயக் கீரையைத் தூவி, வெந்ததும் மறு பக்கம் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

இதன் மருத்துவப் பயன்:

இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்தது.

எலும்புகளைப் பலப்படுத்தும்.

வயிற்றுப் பூச்சிகளை அகற்றும்.

கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு.

click me!