பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனை இதனால் தான் ஏற்படுகிறதாம்.!!

Published : Feb 29, 2020, 08:50 PM IST
பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சனை இதனால் தான் ஏற்படுகிறதாம்.!!

சுருக்கம்

மாதவிலக்குப் பிரச்சனை ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் ரத்தசோகைதான். ரத்தப்போக்கின் காரணமாக பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும்  சிறிது ரத்த இழப்பு ஏற்படுகிறது. இது பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிலக்கு மற்றும் நீண்டகால இடைவெளியில் மாதவிலக்கு ஏற்படுகிறது. 

    T.Balamurukan

மாதவிலக்குப் பிரச்சனை ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் ரத்தசோகைதான். ரத்தப்போக்கின் காரணமாக பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும்  சிறிது ரத்த இழப்பு ஏற்படுகிறது. இது பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிலக்கு மற்றும் நீண்டகால இடைவெளியில் மாதவிலக்கு ஏற்படுகிறது. 

ஒரு பெண் பருவமடைவதற்கும், அவளுடைய இனப்பெருக்க உறுப்புகளான பிறப்புறுப்பு, மார்பகம், கருப்பை மற்றும் சினைப்பைகள் செயல்பாடுகளுக்கும் ஹார்மோன்களின் பங்கு மிக முக்கியமானது. உடல் எப்போது, எப்படி வளரவேண்டும் என்பதை ஹார்மோன்களே கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் முதிர்ச்சியடைந்து வெளியாகும் முட்டை ஆணுடைய விந்துடன் இணைந்து கருவாக மாறும் போதும் கருப்பைக்குள் தங்கி வளர்ச்சியடையத் தேவையான ஏற்பாடுகளையும் இந்த ஹார்மோன்களே செய்கின்றன.
 
45 முதல் 50 வயதை ஒரு பெண் நெருங்கும்போது அவளுடைய உடலில்  ஹார்மோன்களின் உற்பத்தி படிப்படியாக குறைகிறது. இதனால் சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியாவதும் நின்றுவிடுகிறது. 'மெனோபாஸ்' என்கிறோம்.மாதவிலக்கின்போது வெளியேறும் ரத்தத்தில் இருந்து வாடை வருவதும் இயல்பு. வாடை வருவதால் பலர் இதைக் கெட்ட ரத்தம் என்கிறார்கள், அது முற்றிலும் தவறு. நமது உடலில் எந்தப் பகுதியிலும் கெட்ட ரத்தம் என்று ஒன்று இல்லை என்பதே உண்மை.

மாதவிலக்குப் பிரச்சனை ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் ரத்தசோகைதான். ரத்தப்போக்கின் காரணமாக பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும்  சிறிது ரத்த இழப்பு ஏற்படுகிறது. இது பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிலக்கு மற்றும் நீண்டகால இடைவெளியில் மாதவிலக்கு ஏற்படுகிறது.  ரத்த சோகையை தடுக்க இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை நமது உணவு பழக்கத்தில் சேர்க்க வேண்டும். அதாவது முருங்கைக்கீரை, அறைக்கீரை, பேரிச்சை பழம் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்.  ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மாதுளை பழம், கர்ப்பப்பை வலுப்பெற அத்திப் பழம் போன்றவற்றைக் கட்டாயம் பெண்கள் தவிர்க்காமல் உண்ண வேண்டும்.
 

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!