சர்க்கரை வியாதிக்கு இந்த மூலிகை மிகச்சிறந்த மருந்து - படித்து பார்த்து பயன்படுத்துங்கள்...

 
Published : Jan 24, 2018, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
சர்க்கரை வியாதிக்கு இந்த மூலிகை மிகச்சிறந்த மருந்து - படித்து பார்த்து பயன்படுத்துங்கள்...

சுருக்கம்

This herb is the best medicine for diabetes - read and use

சர்க்கரை வியாதிக்கு "சிறு குறிஞ்சான் மூலிகை" மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இதன் இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை. ஜிம்னீமாவில் சபோனின் மற்றும் பாலிபெப்டைடுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இலைகளில் ஜிம்னீமிக் அமிலம் மற்றும் குர்மாரின் காணப்படுகின்றன.

இவை மட்டுமின்றி ஜிம்னமைன் என்னும் அல்கலாய்டும் காணப்படுகிறது. நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுத்த ஜிம்னிமா இலைகள் பெரிதும் பயனுள்ளவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மருத்துவ ஆய்வுகளில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு குறைவான இன்சுலின் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்து அதற்கான ஆர்வத்தினைத் தடுத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலைகள் மிக முக்கிய மருத்துவ பயன் கொண்டவை. நீரிழிவு நோயினை தடுக்க முக்கிய மருந்தாக இந்தியாவில் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரைக்கான ஆசையினை கட்டுப்படுத்துகிறது. 

நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது. மேலும் கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது. விதைகள் வாந்தியினைத் தூண்டக் கூடியது. சளியினை போக்க வல்லது.

வேர்ப்பகுதி இருமலுக்கு சிறந்த மருந்து. வயிற்று வலியினை போக்கி வலுவினைத் தருகிறது. மாதவிடாயினை தடுக்கக்கூடியது. வயிற்று வலியினை போக்க உதவுகிறது. 

சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.

நீரிழிவு உள்ளவர்கள் சக்கரைகொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சா இலையை உண்பதாலும் நிவாரணம் பெறலாம். இது இன்சுலின் என்னும் ஓமோன் சுரக்கப்படுவதைத் தூண்டி இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுபடுத்த உதவுகிறது. சிறுகுறிஞ்சா 2,3 இலையைக் காலையில் பச்சையாகச் சப்பிச் சாப்பிடலாம்.

PREV
click me!

Recommended Stories

Coconut Milk for Kids : பெற்றோரே! ஒல்லியா குழந்தைகளை கொழு கொழுனு மாற்ற சூப்பர் வழி! தேங்காய் பால் போதும்!
Rice Flour On Face : சரும சுருக்கம் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்தையும் நீக்கும் 'அரிசி மாவு' இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க