தூக்கமின்மையால் அவதியா? அதற்கு இதுகூட காரணமாக இருக்கலாம்...

First Published Mar 6, 2018, 1:01 PM IST
Highlights
These are reasons for not getting sleep


 

தூக்கமின்மை!

தூக்கமின்மை அல்லது உறக்க சுழற்சியில் தாக்கம் எற்படுள்ளவர்களுக்கு உடல் எடை கூடும். இது உடல் பருமன் அதிகரிக்க காரணியாக அமைகிறது என ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது உண்மை தான். மரபணு சார்ந்து கூட இந்த தாக்கம் உண்டாகலாம்.

பாரம்பரிய மரபணு தாக்கம்!

குடும்ப வரலாற்றில் மரபணு காரணமாக கூட உடல் பருமன் தொடர்ந்து ஒருவருக்கு தாக்கத்தை உண்டாக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை உறக்க சுழற்சியில், உறங்கும் வேளைகளில் மாற்றங்கள் / தாக்கங்கள் ஏற்படும் போது இந்த மரபணு தூண்டப்பட்டு உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளனவாம்.

நேரம் மாறுபடும்!

அனைவருக்கும் ஒரே அளவிலான தூக்கம் போதுமானது என்பது தவறான கண்ணூட்டம். அவரவர் உடல்நிலை, வேலைகள் சார்ந்து ஒவ்வொருவருக்கும் தேவையான உறக்க நேரம் மாறுபடுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சோம்பேறித்தனம்!

ஒருவேளை சோம்பேறியாக, மந்தமான நபராக இருந்தால் உங்கள் வாழ்வியல் பழக்கமே உடல் எடை அதிகரிக்க காரணியாக அமையும். இதனால் தசைகளின் வலிமை குறையும். இது தானாகவே உடல் பருமன் அதிகரிக்க செய்யும்.

மருத்துவ பரிசோதனை!

இன்று மல்டி டாஸ்கிங், ஷிப்ட் வேலைகள் காரணமாக பலரும் உறக்க சுழற்சியில் தாக்கம் ஏற்பட்டு உடல்நல குறைபாடுகள் கண்டு வருகின்றனர். ஒருவேளை நீங்கள் இந்த கட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தால், உடனே மருத்துவரை கண்டு ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

செய்ய வேண்டியவை!

தினமும், தியானம் செய்வது, யோகா செய்வது நல்ல உறக்கம் பெற உதவும். 

தவிர்க்க வேண்டியவை!

முடிந்த வரை நள்ளிரவு வரை அதிகம் மொபைல், லேப்டாப் பயன்படுத்த வேண்டாம்.

click me!