
அரளி செடியில் இருக்கும் மருத்துவம்
அரளி விஷத் தன்மை வாய்ந்த தாவரம். இதன் மலர்களின் அலங்கார மதிப்புக்காக வளர்க்கப்படுகிறது. அரளி, செவ்வரளி என்றழைக்கப்படும் இந்த தாவரம்தோட்டங்களிலும் கோவில் பூந்தோட்டங்களில் அன்றாட பூஜைகளுக்குப் பயன்படுத்துவதற்கென வளர்க்கப்படுகிறது.
மலர்கள், சிவப்பு அல்லது மஞ்சள், வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. இத்தாவரம் தற்கொலைக்கான முயற்சியுடனும், கருக்கலைப்புடனும் தொடர்பு படுத்தப்பட்டதாகும். ஆனால் இதில் மருத்துவப் பயனும் அடங்கியுள்ளது.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்ட செயல்படும் வேதிப்பொருட்களின் கராபின், நீரியோடெரின், நீரியோமோசைடுகள், நீரியாசைடு, புளூமெரிசின்,கிளைகோசைடு, ஆகியவை முக்கியமானவை.
** இலைகளின் கசாயம் வீக்கம் குறைப்பான் ஆகும்.
** இலைகளின் சாறு பால்வினை நோய் புண்களுக்கு மேல் பூச்சாகப் பயன்படுகிறது.
** கண்நோய்களுக்கும் இலைகளின் புதிய சாறு மருந்தாகும்.
** வேர்ப்பட்டை மற்றும் இலைகளின் களிம்பு படை மற்றும் தோல் நோய்களில் பயன்படுத்தப்படுகிறது.
** வேர் மட்டும் வேர்பட்டை நல்லதொரு கழலை கரைக்கும் பூச்சு ஆகும். உடல்மெலிவிற்கு உதவுகிறது.
** கருச்சிதைவினை தோற்றுவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
** இதன் களிம்பு தொழுநோய் நாட்பட்ட புண் மற்றும் ரத்தம் கட்டியுள்ள இடங்களில் மருந்தாக தடவப்படுகிறது.
** ‘நைகோபோடிஸ் போடிடா” என்ற தாவரவியல் பெயர் கொண்ட அரளியின் இலை, வேர்களில் இருந்து கிடைக்கும் மூலிகைப் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்க உகந்தது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
** அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.
** அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.
** இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் பயன்படுத்தினால் தலை எரிச்சல் காய்ச்சல், பித்தக் கோளாறுகள் போன்றவை நீங்கும்.
** ஆனால், இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.
** அரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது.