இவ்வளவு மகத்துவங்கள் இருப்பதால்தான் சோற்றுக் கற்றாழை ஒரு அதிசயத் தாவரம்;

First Published Jul 22, 2017, 1:12 PM IST
Highlights
The soothing aloe is a miracle plant because there are so many magnets


தேடிய சொர்க்கம், அதிசயத் தாவரம், கிராமங்களின் மருந்தகம் எனப் பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்படும் கற்றாழை அழகுக் குறிப்புகளின் அத்தியாவசிய மூலப் பொருளாக விளங்குகிறது.

சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.

எப்பொழுதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை கருங் கற்றாழ, செங்கற்றாழ, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.

இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது.

கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம்.

சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது.

முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது.

கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர மயிர் வளர்வதுடன் சுகநித்திரையும் உண்டாகும்.

சிற்றாமணக்கெண்ணெயுடன் கற்றாழை சோறு ஊறு வைத்து அரைத்த வெந்தயம் அரிந்த வெள்ளை வெங்காயம் சேர்த்துக் காய்ச்சிப் பதத்தில் இறக்கி வடிகட்டி காலை அல்லது இரவு படுக்கைக்கு போகுமுன்னராகிலும் ஓர் கரண்டி சாப்பிட்டு வர உடற்சூடு நீங்கும். உடல் பெருகும். மேக அனல் மாறும்.

click me!