சர்க்கரைவள்ளி கிழங்கு - நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள்...

First Published Dec 15, 2016, 11:46 AM IST
Highlights


கிழங்கு உணவுகளில் மிகவும் ஆரோக்கியமான உணவு என்றால் அது சர்க்கரைவள்ளி கிழங்கு தான். இதை வேக வைத்தும் சாப்பிடலாம். பொரியல், சாம்பார், கூட்டு என என சமைத்தும் சாப்பிடலாம், வெறுமென பச்சையாகவும் சாப்பிடலாம்.

சர்க்கரைவள்ளி கிழங்கை எப்படி பச்சையாக சாப்பிடவது என சிலர் முகம் கோணலாம். ஆனால், சர்க்கரைவள்ளி கிழங்கை பச்சையாக சாப்பிடுவதால் நிறைய ஆரோயக்கிய நன்மைகள் கிடைக்கின்றன், உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

நன்மைகள்:

1. சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மிகுதியான நன்மை என்று பார்த்தல், அதில் இருக்கும் நார்ச்சத்து, மினரல் சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் தான். இவை அனைத்தும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகமாக உடலில் சேராமல் தவிர்க்க பயனளிக்கின்றன.

2. இதை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா, கூடாத என யோசிக்க வேண்டாம். நீரிழிவு நோயாளிகள் இதை தாராளமாக சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது.

3.சர்க்கரைவள்ளி கிழங்கில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற மினரல் சத்துக்கள் இருக்கின்றன. இவை நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் ஆகும். மேலும், இவை புற்றுநோய் கட்டிகள் உடலில் உருவாகாமல் தடுத்து பாதுகாக்கிறது.

4. சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் வைட்டமின் எ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் சர்க்கரைவள்ளி கிழங்கில் பி 1, பி5, பி6 சத்துக்களும் இருக்கின்றன. இவை உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன.

பக்கவிளைவுகள்:

1. சர்க்கரைவள்ளி கிழங்கை பச்சையாக அதிகம் சாப்பிட்டால் இதில் இருக்கும் சில மூலக்கூறுகள் புரதத்தை செரிமானம் செய்வதில் சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, அளவாக உண்பதே சரி.

2. மேலும், பச்சையாக சர்க்கரைவள்ளி கிழங்கை அதிகம் உண்பதால் வாயுத்தொல்லை அதிகரிக்கலாம். எனவே, இதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

click me!