வயிற்றுப்புண் பிரச்சனைகளை போக்க சில வழிகள்…

Asianet News Tamil  
Published : Dec 17, 2016, 12:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
வயிற்றுப்புண் பிரச்சனைகளை போக்க சில வழிகள்…

சுருக்கம்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் உண்ட உணவின் சுவை, ஏப்பமாக வாயு கலைதல், நெஞ்சு எரிச்சல் போன்ற பல்வேறு தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

தவிர்க்க வேண்டியவை:
இறைச்சி வகைகள், முட்டை, கிழங்கு வகைகள் குறிப்பாக உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி அதிக இனிப்பு வகைகள், பல்வேறு வகையான கொழுப்பு உணவுகள், காலிப்ளவர், முட்டை கோஷ்கள், அதிக கார்-போ-ஹைட்ரேட் வகைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. இந்த நோய் உள்ளவர்கள் உணவில் “ப்யூரின்” என்ற பொருள் அதிகமாக உள்ள உணவைத் தவர்க்க வேண்டும்.

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள்
இரப்பையில் புண், சிறுகுடலின் மேற்பகுதியில் புண் என்ற இரண்டு வகையான புண்கள் குடலில் ஏற்படுகின்றன. பொதுவாக, “வயிற்றெரிச்சல்”, “புளிச்ச ஏப்பம்” ஏற்படுதல், ஜீரண சக்தி குறைந்து விடுதல், பசியின்மை, வயிறு பெருக்கம் போன்றவையும் கூட வயிற்றில் புண்ணிருப்பதற்கு அறிகுறிகளாக அமைகின்றன.

எனவே, வயிற்றுபுண் மற்றும் அது சம்பந்தப்பட்ட நோய்களுக்கு…
தவிர்க்க வேண்டிய உணவுகள்:

அதிகமான புளிப்பு, உப்பு மற்றும் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

அதிக சூடான ஆகாரம் அல்லது திரவ உணவான காப்பி, டீ போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

மது பானங்கள் அருந்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
தலைவலி, மற்றும் உடல்வலி ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் ஆஸ்பிரின், அனால்ஜின், ப்ராசிட்டமால், ப்ரூப்பன், நெப்ராக்ஷன், பினைல்புயூட்டோஷன், டைகுளோபினாக் போன்ற பல்வேறு மருந்துகளும் ஏற்கனவே உள்ள குடல் புண்ணை அதிகரித்து, தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, வயிற்றுப்புண் உள்ளவர்கள் இந்த மாத்திரைகளை முழுமையாகத் தவிர்த்துவிட வேண்டும். மிகவும் அத்தியாவசியமாகப் பயன்படுத்த வேண்டியது வந்தால் இவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உபயோகிக்க வேண்டும். சிறுவர்களுக்குக் கண்டிப்பாக 12 வயதிற்குட்பட்டவர்களுக்குக் கொடுக்கக் கூடாது.

ஆட்டிறைச்சியை அதிகம் சாப்பிடக் கூடாது.
எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
முட்டை வகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

புரோட்டீன் உணவு
இவர்களுக்குத் தினமும் 1 கிலோ எடைக்கு 1 கிராம் வீதம் புரோட்டீன் கொடுக்க வேண்டும். தினமும் சராசரியாக 60 கிராம் வரை புரோட்டீன் தரலாம். பால் வயிற்றில் புண் இருப்பவர்களுக்குச் சிறந்த உணவாகும். ஏனெனில், பாலிலுள்ள புரோட்டீன் வயிற்றுப் புண்ணை நோகச் செய்வதில்லை. ஆட்டிறைச்சியின் ‘சூப்’ வகைகளைக் கண்டிப்பாகத் தரக்கூடாது. ஏனெனில் அதில் அதிக காரமிருக்கும்.

சேர்த்துக் கொள்ள வேண்டியவை:
வெண்ணெய், நெய், பாலாடை, தயிர், மோர் போன்றவையும் நல்லது மிகவும் எண்ணெயில் வறுத்த உணவுகள் ஜீரணமாவது கடினம். ஆகையால், அவற்றைச் சாப்பிடுகின்ற போது அவை பல தொந்தரவுகளையும் ஏற்படுத்தும்.

உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கக்கூடிய உணவு வகைகளை கொடுக்கின்ற அதே நேரத்தில் வைட்டமின் ‘சி’ நிறைந்த உணவையும் தருவது நல்லது வயிற்றுப்புண்ணை விரைவில் ஆற்றுவதற்கு உதவும்.

வயிற்றுப்புண் இருந்து அதிகமாகி இதனால் அதிக இரத்தம் வெளியேறியவர்களுக்குப் புரோட்டீன் உணவைத் தரலாம்.

 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake