கம்ப்யூட்டரில் வேலைப் பார்க்கும் உங்களது கண்களைப் பாதுகாக்க சில பயிற்சிகள்…

 
Published : Aug 16, 2017, 01:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
கம்ப்யூட்டரில் வேலைப் பார்க்கும் உங்களது கண்களைப் பாதுகாக்க சில பயிற்சிகள்…

சுருக்கம்

Some exercises to protect your eyes from working in computer ...

 

பல மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், அதிக நேரம் டிவி பார்ப்பவர்கள், மொபைல்போன் பயன்படுத்துபவர்கள் போன்றோரின் கண்களைப் பாதுகாக்க சில பயிற்சிகள் உள்ளன.

இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் கண்களின் சோர்வை நீக்கலாம்.

தினமும் காலை நேரத்தில் நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள இடத்தில் இந்த பயிற்சிகளையும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

1. பயிற்சியை தொடங்கும் முன் வசதியாக விரிப்பில் அமர்ந்து இரு கண்களையும் இறுக்கமாக மூடவும். எவ்வளவு இறுக்கமாக மூட முடியுமோ அவ்வளவு இறுக்கமாக மூடவும். சில நொடிகளுக்கு பிறகு கண்களை முடிந்தவரை நன்கு திறக்கவும். பின்னர் கண்களை 5 முறை சாதாரணமாக மூடி, மூடி திறக்கவும். பின்னர் மீண்டும் கண்களை இறுக்கமாக மூடி சில நொடிகள் கழித்து திறக்கவும்.

2.. கண்களை மூடி ஒரு நிமிடம் ஆழமாக மூச்சுவிட வேண்டும். பின்னர் கண்களை திறந்து எதிரே இருக்கும் பொருளை கூர்மையாக பார்க்கவும். பின்னர் ஆழமாக மூச்சு விட்ட படி கண்களை மூடவும். அப்போது எதிரே இருக்கும் பொருளை மனக்கண்ணால் பார்க்க வேண்டும். இது கண்களின் சோர்வை நீக்கவும், கவனத்தை குவிக்கவும் உதவும் பயிற்சியாகும்.

3. கண் இமைகளை மூடி விழிகளை சுழற்றவும். முதலில் வலமிருந்து இடமாக 5 முறை சுழற்றவும். பின்னர் எதிர் திசையில் 5 முறை சுழற்றவும். பின்னர் 5 முறை கண்களை திறந்து மூடவும்.

4. கண்களை திறந்து வைத்துக் கொண்டு வசதியாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும். பின்னர் தலையை அசைக்காமல் கண்களால் எவ்வளவு தூரம் மேலே பார்க்க முடியுமோ அவ்வளவு தூரம் பார்க்கவும். சில நொடிகள் இது போல் பார்க்கவும்.

பின்னர் இது போல் கீழே பார்க்கவும், இது போல் வலது, இடது, மூக்கின் நுனிகளை பார்க்கவும். ஒவ்வொரு கோணத்திலும் சில நொடிகள் பார்த்து விட்டு கண்களை மூடி மூடி திறக்கவும். இது போல் 10 முறை செய்யவும்.

5. கைகளை முன்புறமாக நீட்டவும். கை விரல்களை மடக்கி கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைக்கவும். இப்போது கைவிரலை கண்களுக்கு மிக அருகில் கொண்டு வரவும். பின் பின்னோக்கி செல்லவும். இவ்வாறு விரல்களை முன்னும் பின்னும் கொண்டு செல்லும் போது கண்கள் கட்டை விரலை பார்த்தபடியே இருக்க வேண்டும். இவ்வாறு 15 முறை செய்யவும்.

6. கடைசியாக இரு உள்ளங்கைகளையும் ஒன்றுடன் ஒன்று தேய்க்கவும். பின்னர் சூடான உள்ளங்கைகளை மூடிய கண்களின் மீது பொத்தி வைக்கவும். கண்களுக்குள் இதமான வெப்பம் பரவும். பின்னர் கண்களை திறக்கவும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கண் தசைகளும், பார்வையும் பலமடையும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க