வறட்டு இருமலுக்கு என்னென்ன தீர்வுகள்…

 
Published : Oct 19, 2016, 03:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
வறட்டு இருமலுக்கு என்னென்ன தீர்வுகள்…

சுருக்கம்

 

வறட்டு இருமல் என்றால் என்ன?

வறட்டு இருமல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது அதிகமாக குழந்தைகளை பாதிக்கிறது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று அதிக சத்தத்துடன் இருமுவார்கள். இருமும் பொழுது தொண்டையில் எரிச்சல் அதிகமாக ஏற்படும். குறிப்பாக படுத்தவுடன் இருமல் அதிகமாக ஏற்படும். தொண்டை கட்டினாற்போல் பேசுவார்கள்.

வறட்டு இருமல் வரக்காரணம்

வறட்டு இருமல் வர முக்கியமான காரணமாக கருதப்படுவது தூசு மற்றும் புகை. புகை பிடிப்பவகளை மட்டுமின்றி அவர்கள் அருகில் இருப்பவர்களையும் இது பாதிக்கிறது. அசுத்தமான தண்ணீரினால் கூட இந்த நோய் ஏற்படலாம். வறட்டு இருமலின் பெயருக்கு ஏற்றார் போல் இந்த வறட்டு இருமல் சளி இல்லாமல் நம்மை தாக்கும். இதன் மற்றொரு காரணமாக ஒவ்வாமை கூறப்படுகிறது. சிலருக்கு விலங்குகளின் முடியினாலும் வறட்டு இருமல் ஏற்படலாம். சினிமா தியேட்டரில் விற்கும் நாள்பட்ட ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் வறட்டு இருமல் வரும்.

வறட்டு இருமலுக்கு கொள்ளுப்பொடி,மிளகு, சுக்கு, பூண்டு  கசாயம் மருந்து

கொள்ளுப்பயிறு 50கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் மிளகு, சுக்கு, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு இந்த கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனை இரண்டு நாட்கள், நாளுக்கு இரு வேளை குடித்தாலே போதும் வறட்டு இருமல் மட்டுமின்றி எந்த விதமான இருமலும் காணாமல் போகும்.

 

வறட்டு இருமல் குணமாக எலுமிச்சை, தேன் மருத்துவம்

பொதுவாக இருமல் ஜலதோஷம் அதிகம் உள்ளவர்கள் விட்டமின் c அதிகமாக உட்கொள்ள வேண்டும். காரணம் விட்டமின் c சளி யை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. எலுமிச்சையில் விட்டமின் c அதிக அளவில் உள்ளது. இளஞ்சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எழுமிச்சை சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் மற்றும் அதன் காரணமான சளியும் காணாமல் போகும்.

 

வறட்டு இருமல் குணமாக இஞ்சி, தேன் மருந்து

அரை விரல் அளவிற்கு இஞ்சியை எடுத்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொண்டு அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி, இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வர வறட்டு இருமல் குணமாகும்.

 

வறட்டு இருமல் குணமாக உலர் திராட்சை மருந்து

உலர் திராட்சை குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் ஓர் உணவு. 50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கிண்ட வேண்டும். பின்பு இந்த கலவையை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும். இதன் சுவையும் நன்றாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். வறட்டு இருமல் குழந்தைகளுக்கு வந்திருந்தால் இந்த மருந்தை தாரளமாக கொடுக்கலாம்.

 

வறட்டு இருமலுக்கு புதினா மருந்து

வறட்டு இருமலுக்கு வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ சூப் செய்தோ சேர்த்துக்கொள்வதால் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.

 

வறட்டு இருமல் குணமாக மாதுளம், தேன், இஞ்சி மருந்து

மாதுளம் பழத்தை தோல் இல்லாமல் மாதுளம் பழ முத்துக்களை மட்டும் எடுத்து பழசாறு ஆக்கி கொள்ள வேண்டும். மாதுளம் பழத்தின் முத்துக்களை மிக எளிமையாக எடுக்க, மாதுளம் பழத்தை சரி பாதியாக வெட்டி, பாதி மாதுளம் பழத்தை தலைகீழாக பிடித்துக்கொண்டு ஒரு கரண்டியை வைத்து வேகமாக தட்டினால் முத்துக்கள் தானாய் உதிர்ந்து விடும். மாதுளம் பழசாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும்.

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க