
1.. ஆரோக்கியமான சரிவிகித உணவு கலந்த உணவுப்பழக்கம், காலை உணவைக் கட்டாயம் சாப்பிடுவது, நேரத்துக்கு உணவை உண்பது போன்றவை நொறுக்குத்தீனிக்கு தேவையைக் குறைக்கும்.
2. வாயில் எதையாவது அரைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், பொட்டுக்கடலை, பொரி,பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம்.
3. பொதுவாக, ஒரு நாளைக்கு 95 சதவிதம் உணவை உட்கொள்ள வேண்டும்; 5 சதவிகிதம் மட்டுமே நொறுக்குத்தீனிகளை எடுத்துக்கொள்ளாம்.
4. ஒரு உணவு வேளைக்கும், இன்னோர் உணவு வேளைக்கும் இடையில் பழச்சாறு அருந்தலாம். பழச்சாறு அருந்துவதன் மூலம் நொறுக்குதீனி சாப்பிடும் உணர்வைக் குறைக்கலாம்.
5. மாலை வேளைகளில் சுண்டல், பயறு வகைகள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
6. தியேட்டர், பள்ளி வளாகங்கள், டீக்கடைகள் போன்றவற்றில் பாப்கார்ன், கோலா பானங்கள், பிரெஞ்ச் பிரைஸ், சிப்ஸ் போன்றவற்றை விற்பதைத் தவிர்த்து பொரி உருண்டை, வேர்க்கடலை, பொரி போன்றவற்றை விற்பதையும் அவற்றை வாங்கிச் சாப்பிடவும் ஊக்கப்படுத்தலாம்.