1.. புகைப்பிடித்தால் நுரையீரலில் என்ன நடக்கிறது?

 
Published : Nov 15, 2016, 11:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
1.. புகைப்பிடித்தால் நுரையீரலில் என்ன நடக்கிறது?

சுருக்கம்

நுரையீரலில் புகையின் விளைவு, இரத்தகுழாய், மூளை ஆகியவற்றில் நடப்பது.

புகைப்பவர்களுக்கு ஒரு சிகரெட்டிலிருந்து சராசரியாக 1மில்லிகிராம் அளவு நிகோட்டின் நுரையீரல் வழியாக உடலுக்குள் செல்கிறது. நுரையீரல் உள்சுவர்களில் கோடிக்கணக்கான 'ஆல்வியோலி' Alveoli என்ற நுண்ணிய காற்றுப் பைகள் உள்ளன. இதன் மூலமாகவே உடலுக்குள் வாயுப் பரிமாற்றம் நடக்கிறது. (இந்த ஆல்வியோலியின் சுவர்ப் பகுதியின் பரப்பளவு நமது மொத்தத் தோல் பகுதியை விட 90 மடங்கு அதிகம்). இதன் வழியாக ரத்தக்குழாய்களை எட்டும் நிக்கோட்டின் உடனடியாக மூளையை நோக்கி பயனிக்கிறது.

ஆல்வியோலி பைகளுக்குள் நிகோட்டின் நுழைந்ததுமே நுரையீரல் வேகமாக செயல்பட்டு சுமார் 80 சதவிகித நிகோட்டினை 'கோட்டிநைன்' (Cotinine) மற்றும் 'நிகோட்டின் ஆக்சைட்' (Nicotine Oxide) என பிரித்து உடலுக்குள் அனுப்புகிறது. (இதில் கோட்டிநைன் நேரடியாக சிறுநீரில் வெளியேறி விடும். நிகோட்டின் ஆக்சைட் பின்னர் இரத்ததிலிருந்து சுத்தப்படுத்தப்பட்டு சிறுநீரில் வெளியேறும்.).

தொடர்ந்து புகைப்பவர்களுக்கு, ஆல்வியோலி பகுதி அதிக வேலைப்பளுவுடன் இருப்பதால் இவை செயல்திறன் குறைந்தும், சில பகுதிகளில் அழிந்தும் போவதுண்டு. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும். நுரையீரலில் புண்கள் உண்டாகி 'கேன்சர்' வரக் கூடும். போதிய அளவு காற்று கிடைக்காததால் இதயமும் பாதிக்கப்படலாம்.

புகையிலையில் நிகோட்டினைத் தவிர ஆயிரக்கணக்கான மற்றப் பொருள்களும் உண்டு. இதில் பல உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. மேலும் புகை, தூசி போன்றவை நுரையீரலுக்கு வரும் குழாய்களில் (ப்ரோன்கஸ்) வந்துவிட்டால் ம்யூகஸ் எனும் திரவம் இதன் சுவர்களில் சுரந்து அவைகளை ஒட்டிக் கொள்ளச் செய்யும். இதுவே சளியாக வெளியேறுகிறது. அதிக அளவு புகை இந்தக் குழாய்களில் செல்லும் போது தொடர் இருமல் ஏற்படுகிறது.

இது தவிர நிகோட்டின், தான் பயணம் செய்யும் ரத்தக்குழாய்களை சுருங்க செய்வதும் உண்டு. இதனால் உடலில் ரத்த ஓட்டம் குறையவும், ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் கூடும்.

 

PREV
click me!

Recommended Stories

Mookirattai Keerai : பவர்புல் கீரை 'அனைத்து' பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தரும் 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?
Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு