மார்கழி மாத சளி மற்றும் இருமலுக்கான எளிய வைத்தியங்கள்...

First Published Jan 4, 2017, 1:29 PM IST
Highlights


மார்கழி பனியால் ஏராளமானோர் இருமல், சளியால் பாதிக்கப்படுவது இயல்பே. அவர்களுக்கான எளிய வைத்தியங்கள் இதோ…

தற்போதுள்ள மார்கழி பனியால் நீங்களும் இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யுங்கள்.

1. ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

2. கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

3. மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

4. வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

5. வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

6. இரவில் படுக்கும் முன் பாலில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் கலந்து குடித்தால், இருமல் வருவதைத் தடுக்கலாம்.

7. கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.

click me!