குளிர் காலத்திலும் முகம் பளப்பளக்க…

 
Published : Oct 15, 2016, 05:28 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
குளிர் காலத்திலும் முகம் பளப்பளக்க…

சுருக்கம்

 

குளிர்காலத்தில்தான் சருமத்தில் நிறைய சுருக்கங்களும் வறட்சியும் அதிகரிக்கும். அதனை அந்த சமயங்களில் கவனிக்காவிட்டால், பின்னர் சருமத்தில் பாதிப்புகள் உண்டாகி அதனை சரிப்படுத்த முடியாமலே போகும்.

அதனால் மற்ற காலங்களை விட குளிர் மற்றும் மழை காலத்தில் சருமத்தை பாதுகாப்பது அவசியம். குளிர்கால குறிப்புகள் உங்களுக்கு ஏற்றவாறு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தி உங்கள் சருமத்தை பாதுகாத்திடுங்கள்.

முகம் என்றும் இளமையாக இருக்க:
முழு பச்சைபயிறு, கடலை பருப்பு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து பொடித்துக் வைத்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் கழுத்து, முகத்தில் பூசி குளித்து வந்தால், உங்கள் முகத்திற்கு எந்த அழகு க்ரீம்களும் அவசியம் இருக்காது. வாரம் ஒரு நாள் வேப்பிலையை அரைத்து, உடலில் தேய்த்து 5 நிமிடங்கள் ஊற விடுங்கள். பின்னர் குளித்தால் தேகம் மின்னும். சரும வியாதிகள் எதுவும் உங்களை நெருங்காது. குளிர்காலத்தில் வறண்டு போகாமல் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.
 

முகத்தில் கரும்புள்ளி, முகப்பருக்கள் மறைய:
பாத்திரத்தில் தண்ணீர் உற்றி அதில் புதினா இலை இரண்டு, வேப்பிலை நான்கு, துளசி இலை நான்கு சேர்த்து நன்கு கொதித்த பின் முகத்தில் ஆவி பிடிக்கவும். வாரம் இருமுறை செய்தால் முகப்பருக்கள் காணாமல் போயிடும். சருமத் துளைகள் திறந்து பேக்டீரியக்களை அழித்துவிடும். முகப்பருக்கள் அண்டாது. முல்தானி முட்டியுடன் சிறிது ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு சில சொட்டுக்கள் கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பரு தொல்லை இருக்காது.

PREV
click me!

Recommended Stories

Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!
Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க