உங்களின் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த பழம் தீர்வளிக்கும்…

First Published Jan 13, 2017, 1:42 PM IST
Highlights

பப்பாளி வயிற்றுப் புழுக்களை கொல்லும்,

தாய்பால் பெருக்கும், மாதவிலக்கைத் தூண்டும்,

நாடி நடையை உயர்த்தி உடலுக்கு வெப்பம் தரும்,

மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்கும்.

சிறுநீர்ப் பெருக்குவது கொழுப்பைக் கரைத்து உடலை இளைக்க வைக்கும்.

மண்டைக்கரப்பான், சொறிக்கு படிகாரத்துடன் இப்பாலை மத்திதுப் போட குணமடையும்.

பப்பாளிக்காயைச் சமைத்து வாரம் மூன்று நாள் உண்டு வரத் தடித்த உடம்பு குறையும்.

பழம் நாளும் ஒரு துண்டு சாப்பிடலாம். தாய்ப் பால் பெருகும்.

மாத விலக்கில் தடை இருந்தால் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் நீங்கும். ஓரிரு மாதக்கருவும் கலையும். விதையைத் தூள் செய்து 5 கிராம் வெல்லத்தில் சாப்பிட கரு கலையும். தடைபட்ட விலக்கு வெளியைறும்.

புலால் செய்வோர் 2-3 துண்டு பப்பாளிகாயைப் போட்டு வேக வைத்தால் எளிதில் வேகும். பதமாகவும் சுவையாகவும் இருக்கும்.

நாள்தோறும் 1 துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரல், வீக்கம் குறையும்.

செரிபாற்றல் பெருகும்.

குன்மம், ரணம், அழற்சி, வயிற்றுப் பூச்சி, மலச்சிக்கல், சிறுநீர்பாதை அழற்சி ஆகியவை தீரும்.

click me!