உடல் குளுமை தரும் சவ்வரிசி…

 
Published : Oct 23, 2016, 03:53 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
உடல் குளுமை தரும் சவ்வரிசி…

சுருக்கம்

சவ்வரிசியில் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. 100 கிராம் சவ்வரிசி, 94 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் உள்பட 355 கலோரிகள் வரை கொடுக்கிறது.

அரிசியுடன் சவ்வரிசியும் சேர்த்துச் சாப்பிட்டால், அது சூடான உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.

மேலும் அதில் உள்ள கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு அதிக சத்தைக் கொடுக்கிறது. இந்திய பாரம்பரியமிக்க உணவாகக் கருதப்படும் ஜவ்வரிசி, சில மூலிகை மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

சவ்வரிசி கொண்டு பல வகையான உணவுகளை நாம் தயாரிக்க முடியும்.

இதில் புரதம், வைட்டமிகள் குறைவாக இருப்பதால், எந்த வகையான உணவுடனும் அதைச் சேர்த்து சத்தான உணவாக மாற்றலாம். சிலர் இதைக் கிச்சடியாகவும் செய்து சாப்பிடுவார்கள்.

சவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

மேலும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கு ஒரு சரியான மாற்று உணவாக சவ்வரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!