ஒரே நாளில் இரண்டு கிலோ எடையை குறைக்கலாம்; அதுவும் இயற்கை வழியில்...

 
Published : Apr 04, 2018, 01:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
ஒரே நாளில் இரண்டு கிலோ எடையை குறைக்கலாம்; அதுவும் இயற்கை வழியில்...

சுருக்கம்

Reduce the weight of two kilograms in one day That is the natural way ..


க்ரீன் டீ மற்றும் பாதாம் பால் கொண்டு தயாரித்த இந்த டீயைக் குடித்தால் ஒரே நாளில் 2 கிலோ எடையை குறைக்கலாம்.

தேவையான பொருட்கள்

பாதாம் பால் – 1.5 லிட்டர்

க்ரீன் டீ பொடி – 2 டேபிள் ஸ்பூன்

தேன் – சிறிது

செய்முறை

முதலில் பாதாம் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நன்கு சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் க்ரீன் டீ பொடியை சேர்த்து மூடி வைத்து 20 நிமிடம் கழித்து, அதை வடிகட்டி, தேன் சிறிது கலந்தால் டீ ரெடி.

குடிக்கும் முறை

இந்த டீயை ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் என்று ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டும்.

இந்த டயட்டை பின்பற்றும் போது, குறைந்தது 2 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டுவதோடு, க்ரீன் டீ பாதாம் பாலை எளிதில் செரிமானமடையச் செய்யும்.

ஏற்படும் நன்மைகள்

இந்த டீ அற்புதமான சுவையில் இருப்பது மட்டுமின்றி, அடிக்கடி பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தி உடல் எடையை விரைவில் குறைக்கச் செய்கிறது.

க்ரீன் பொடி கலந்த இந்த டீயை குடித்தால், நமது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கிறது.

இந்த டீ டயட்டை மாதத்திற்கு 2 நாட்களுக்கு மேல் பின்பற்றக் கூடாது.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை, சிறுநீரகம் அல்லது பித்தப்பை நோய்கள், குறைவான ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க இந்த டயட்டைப் பின்பற்றக் கூடாது.

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்