ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை உங்களை அண்டாமல் இருக்க இந்த உணவை சாப்பிடுங்கள்...

 
Published : Jan 27, 2017, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை உங்களை அண்டாமல் இருக்க இந்த உணவை சாப்பிடுங்கள்...

சுருக்கம்

நீங்கள் இந்த உணவை சாப்பிடுகிறீர்கள் என்றால் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம். குறிப்பாக ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை எதுவும் உங்களை அண்டவே அண்டாது.

அப்படியென்ன உணவு என்று கேட்கிறீர்களா? மீன் உணவுதான்.

மீன் உணவில், கெட்ட கொழுப்பு அறவே இல்லை.

அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது.

இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர்களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.

எனவே, வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

மீன் சாப்பிட்டால் எந்தெந்த நோய்கள் வராது எனத் தெரியுமா?

1.. ஆஸ்துமா:

மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

2. கண் பாதிப்பு:

மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.

3. கேன்சர்:

பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

4. இருதய நோய்:

கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

எப்படி சாப்பிடணும்?

1. மீன் உணவை, எந்த வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போகாது. ரொட்டி போல சுட்டு தயாரிக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் தயாரித்தால் நல்லது.

2. வாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். "ஓவன்' சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.

3. உறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால், அவற்றை சமைக்கும் போது, மிகுந்த கவனம் தேவை.

4. பாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்களும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தவிர்த்துவிட வேண்டும்.

5. மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த வளர்ப்பு மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க