
சீரகம்:
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும் வலிமை இதற்கு உண்டு. 2 லிட்டர் தண்ணீரில் 2 ஸ்பூன் சீரகம் போட்டு கொதிக்கவைத்து குடித்துவர சிறுநீர் நன்றாக பிரியும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டாகும்.
கிராம்பு:
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கிறது உடல் பலம் அதிகரிக்க செய்கிறது. நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும்.
இஞ்சி :
வயிற்றுக் கோளாறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இஞ்சி ஒரு மிக சிறந்த மருத்துவ நிவாரணி. நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க செய்யும்.
புதினா:
ஆஸ்துமா என்னும் நோய் வராமல் தடுக்கும் திறன் புதினாவிற்கு உண்டு. ஜீரண சக்தியை அதிகரிக்கும். பற்கள் சம்பந்தமான பிரச்சனைகளை தடுக்கிறது.
ஏலக்காய்:
சோர்வை போக்கி புத்துணர்வை கொடுக்கும். தலைவலி, தலைசுற்றல் ஆகியவற்றுக்கு உடனடி நிவாரணி. நெஞ்சு எரிச்சல், அஜீரணத்தால் ஏற்படும் புளிப்பு ஏப்பம் உடனடியாக குறைக்கும்.
மல்லி:
இருமல், காய்ச்சல், செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி மல்லிக்கு உண்டு.
வெந்தயம்:
நீரிழிவு நோயை கட்டுபடுத்தும். காலையில் வெறும் வயிற்றில் 5mg
பவுடர் எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிட நீரிழிவு நோய் பறந்தோடும். வயிற்றுப்போக்கை நிறுத்த மோருடன் கலந்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நிற்கும்.
மஞ்சள்:
ரத்த சோகையை குணப்படுத்த மஞ்சள் மிகச்சிறந்த நிவாரணி. காயங்களுக்கு மஞ்சள் பூசிவர காயம் விரைவில் குணமாகும். இரும்பு சத்து அதிகம் உள்ளது. குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும் குணமுடையது.
சோம்பு:
வாயு கோளாறை விரைவில் குணப்படுத்தும். வாய் துர்நாற்றத்தை போக்கும்.
பூண்டு:
உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மையுடையது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், ஆகியவற்றை கட்டுபடுத்துகிறது.. மூல நோயை குணப்படுத்துகிறது.
பெருங்காயம்:
கக்குவான், இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை அதிகரிக்கும்.
கடுகு:
இதில் உள்ள சல்பர், அப்லோ டாக்சின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்கும். இருமல், நீரிழிவு, பக்கவாதம், தோல் நோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.