அன்றாட வாழ்வில் சாப்பிடும் பொருள்களில் உள்ள நன்மைகள்…

 
Published : Jan 18, 2017, 12:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
அன்றாட வாழ்வில் சாப்பிடும் பொருள்களில் உள்ள நன்மைகள்…

சுருக்கம்

1. கிராம்பு:

இது ஒரு இயற்கை யான இரைப்பைக் குடல் வலி நீக்கியாகும். இது குடல் தசை இயக் கத்தை துரித்தப்படுத் துகிறது மற்றும் உமிழ் நீர் சுரப்பதையும் அதிகப்ப டுத்துகிறது.

இதன் ஒரு வகையான கசப்புக் கலந்த காரமான சுவை, அதிகளவு உமிழ்நீர் சுரப்பதைத் தூண்டுவதால், செரிமானத்திற்கு உதவுகிறது. ஆகவே அசிடிட்டியால் அவதியுறும் போது, ஒரு கிராம்பை கடித்து வாயில் வைத்துக் கொள்ளுங்கள், இதிலிருந்து வெளியாகும் திரவம் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தி நிவாரணம் அளிக்கும்.

2. ஏலக்காய்:

சளி, பித்தம், வாதம் ஆகிய மூன்று தோஷங்களையும் சரிசெய்யக் கூடிய ஒரே உணவு ஏலக்காய் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது. இது செரிமானத்தை துரிதப்படுத்தி, வயிற்று வலியைக் குறைக்கும்.

இது இரைப்பையின் உட்பரப்பில் சீத தன்மையை சமப்படுத்தி, வயிற்றில் அதிகளவு அமிலம் சுரப்பத்தால் ஏற்படும் தாக்கத்தை தணிக்கிறது. இதன் இனிப்புச்சுவை மற்றும் குளிராக்கும் தன்மை, அசி டிட்டியின் மூலம் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கொடுக்கும்.

குறிப்பாக அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, கொஞ்சம் ஏலக்காயை பவுடராக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

3. புதினா:

புதினா இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும் பல்வேறு உணவுகளை நறுமண சுவைïட்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை அசிடிட்டிக்கு நிவாரணம் தரும் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

இது வயிற்றில் அமிலத் தைக்குறைத்து, செரி மானத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதன் குளிர்விக்கும் தன்மை அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சலுக்கும் நிவாரணம் தருகிறது. அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டால், சில புதினா இலைகளைக் கசக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், இந்த நீரை பருகினால் நிவாரணம் கிடைக்கும்.

4. இஞ்சி:

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் இஞ்சி. இது உணவை உறிஞ்சும் தன்மையை அதிகரித்து, விரைவாக செரிமானம் அடைவதற்கு வழிவகுக் கிறது. உணவிலுள்ள புரதச் சத்துக்களை உடைத்து, அவை உடலில் சேர்வதற்கு உதவுகிறது. இஞ்சி, வயிற்றில் சீதம் சுரக்கும் அளவை அதிகப்படுத்துவதால், அமிலத் தாக்கத்தைக் குறைக்கிறது.

வேண்டுமெனில் சிறிய இஞ்சித் துண்டை மென்று சாப்பிடலாம். இது தடினமாக இருந்தால், நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை குடிக்கலாம். அதேப்போல், இஞ்சியை அரைத்து, கொஞ்சம் வெல்லம் சேர்த்து, வாயில் வைத்து உறிஞ்சுவதால், இது மெதுவாக வயிற்றுப் பகுதிக்குச் சென்று அசிடிட்டிக்கு நிவாணம் அளிக்கும்.

5. நெல்லிக்காய்:

இதில் அதிகளவு வைட்டமின் `சி’ உள்ளது. இதைத் தவிர சளி மற்றும் பித்ததிற்கு சிறந்த மருந்தாகும். இதன் நோய் நீக்கும் சக்தி உணவுக் குழாயுடன் இணைந்த இரைப்பை புண்களைக் குணமாக்க உதவுகிறது. ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பவுடரை, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், அசிடிட்டி பிரச்சனை உருவாகாது.
எனவே உங்களுக்கு அசிடிட்டி தொல்லை ஏற்படும் போது, ஆன்டாஸிட் மாத்திரையை பயன்படுத்துவதற்கு பதிலாக, நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும், மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி நல்ல நிவாரணம் பெறுங்கள்.

PREV
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!