சமையலுக்கு மட்டுமல்ல மருத்துவத்திற்கும்தான் பூண்டு…

Asianet News Tamil  
Published : Dec 24, 2016, 12:40 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
சமையலுக்கு மட்டுமல்ல மருத்துவத்திற்கும்தான் பூண்டு…

சுருக்கம்

பூண்டை எல்லோரும் சமையலுக்காக பயன்படுத்துவர்.  நமது தமிழ்நாட்டில் பூண்டு சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மிக அதிகம்.  சிறிது காரம் மற்றும் வாசனையுடன் உள்ள வெள்ளைப் பூண்டு சமையல் மட்டுமின்றி மருத்துவத்திற்கும் பயன்படுகின்றது. அதன் பலன்களைப் பார்ப்போம்.

1. செரிமானம் மற்றும் வாயுத்தொல்லைக்கு ஒரு பெரிய பல் பூண்டு ஒரு டீ-ஸ்பூன் பூண்டு மற்றும்  5 மிளகு வைத்து மென்று தண்ணீர் குடித்தால் உடனே வாயு மற்றும் செரிமானப்பிரச்சினைகள் அடியோடு தொலைந்துவிடும்.

2. புளித்த ஏப்பம் அஜீரணத்தாலும் உடலில் அமிலத்தன்மை அதிகமானதாலும் வருகின்றது.  இந்த சமயத்தில் பூண்டை வாயில் போட்டு மென்று தின்னால் போதும் உடனே பூண்டு வேலையை செய்து அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையை சமன்செய்யும்.

3. உடல் சோர்வு மற்றும் பலவீனம் அடைந்த போது பூண்டை ஒரு பல் எடுத்து சாப்பிட்டு தண்ணீர் அருந்தினால் புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் பிறக்கும்.

4. ஒரு பல் பூண்டை தினமும் பாலைக் காய்ச்சி நசுக்கி போட்டு குடித்தால் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஆகியவைகள் வர வாய்ப்புகள் குறையும்.

5. முகப்பரு உள்ளவர்கள் பூண்டு சாப்பிட்டால் போதும் கெட்ட கொழுப்புகள் வெளியேறி கொப்புளங்கள் வருவதை தடுக்கும்.

6. சர்க்கரை நோயாளிகள் மட்டும் பூண்டை குறைவாக உண்ணுங்கள்.  ஏனென்றால் இன்சுலினை அதிகப்படுத்திவிடும்.

7. மதிய சாதத்திற்கு வாரத்திற்கு இரண்டு நாள் பூண்டுப் பொடி சாதம் செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்புகள் நீங்கிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

8. பூண்டை எண்ணெயில் காய்ச்சி ஆறிய பின் அந்த எண்ணெயை நெஞ்சில் தடவினால் போதும் உடனே சளி கோளாறு சரியாகிவிடும்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!