எள்ளைச் சாப்பிட்டால் உங்களுக்கு கிடைக்கும் அற்புத பலன்கள்…

 
Published : Jun 17, 2017, 01:30 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
எள்ளைச் சாப்பிட்டால் உங்களுக்கு கிடைக்கும் அற்புத பலன்கள்…

சுருக்கம்

Medical benefits you get if you eat ellu

 

உடல் பருக்க:

காலை எழுந்தவுடன், சுமார் 20 கிராம் கறுப்பு எள்ளை வெறும் வாயில் மென்று தின்றால் உடல் மெலிதாக இருப்பவர்கள் சதை போட்டு பருத்துவிடுவார்கள்.

படுக்கையில் சிறுநீர்

உங்கள் குழந்தைகள், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், இரவில் வெண்முள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுக்கவும். இப்பழக்கம் நாளடைவில் மறையும்.

மூலநோய் உடையவர்கள்:

மூலநோய் உடையவர்கள் சிறிது எள்ளுடன், கொஞ்சம் ஆட்டுப்பால் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கரைத்துக் குடித்து வந்தால் குணமடையும்.

இரத்தக்காயம்:

இரத்தக்காயம் ஏற்பட்ட இடத்தில் அரைத்த எள்ளுடன் தேனையும் நெய்யையும் கலந்து தடவ பலன்தரும்.

பல் வலுப்பெற

தினசரி காலை ஒருபிடி எள் சாப்பிட்டால், பற்களின் வீழ்ச்சி தடுக்கப்படுவதோடு மட்டுமல்லாது, பற்கள் பலமும் பெறும்.

தொழுநோய் குணமாக:

எள், உப்பு, மிளகாய் இவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து, லேசாக வறுத்து, இடித்து சலித்தெடுத்து வைத்துக்கொண்டு,தினமும் காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவை அரை தேக்கரண்டி பசு நெய்யில் கலந்து 21 நாள்கள் உண்டால் குணமாகும்.

நீரிழிவு நோய்:

எள்ளை 3 மணிநேரம் ஊறவைத்தால், மேலிருக்கும் கறுமை நிற தோல் நீங்கி வெள்ளை நிறத்தில் வரும். இதை நன்கு காயவைத்து, வானலியில் வறுத்து, பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக்கிளறி, எலுமிச்சையளவு தினமும் காலை உண்டு, வெந்நீர் பருகினால் நீரிழிவு நோய் குறையும்

 

PREV
click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
கல்லீரலை நாசமாக்கும் 7 மோசமான உணவுகள்