முட்டைக்கோஸ், காலிபிளவரில் அதிக நோய் எதிர்ப்பு சக்திகள் இருக்காம் – ஆய்வு சொல்லுது…

First Published Jul 15, 2017, 1:38 PM IST
Highlights
Medical benefits of cabbage


 

தற்போது கண்டறியப்பட்ட ஆய்வின்படி குரூசிபெரோஸ் காய்கறி வகைகளான முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவை அதிக நோய் எதிர்ப்பு சத்துகளை உள்ளடக்கி உள்ளது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

அனைத்து காய்கறிகளிலும் ஊட்டச்சத்து மற்றும் பிற பயன்பாடுகள் இருந்தாலும் குருசிபெரோஸ் காய்கறிகளில் சிறப்பு ரசாயன கலவை உள்ளது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.

அந்த காய்கறிகளில் சல்பர் – சத்துக்கள் மிக அதிக அளவில் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏனென்றால் இந்த வகை காய்கறிகளை வெட்டும்போதும், உடைக்கும்போதும் அல்லது கடிக்கும்போதும் சல்பர் (கந்தகம்) சத்துகள் அனைத்தும் ஐஸோதியோனைட்டுகளாக மாற்றம் அடைகிறது.

இது புற்று நோய்க்கு மிகவும் ஏற்ற எதிர்ப்பு சத்து பொருளாகும். இதனை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து நிரூபித்துள்ளனர்.

இந்த குரூசிபெரோஸ் காய்கறிகளில் அதிக அளவு Sulfur சத்துகள் இருப்பதால் வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறதாம்.

இந்த ஆற்றல் எந்தெந்த காய்கறிகளில் உள்ளது என்பதை விஞ்ஞானிகள் கூறினர். அவை முட்டைகோஸ், பீற்று கீரைகள், காலிபிளவர், ப்ராக்கோலி கிளைகோசுகள், காலே, கோல்ராபி, கடுகு கீரை, முள்ளங்கி. டர்னிப் போன்ற காய்கறிகளை தினமும் நாம் உணவில் எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக புற்றுநோய்க்கு நாம் மாத்திரை எடுத்து கொள்வதிலிருந்து விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

click me!