வழ வழ கொழ கொழ வெண்டைக்காயின் நற்குணங்கள்…

 
Published : Oct 11, 2016, 05:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
வழ வழ கொழ கொழ வெண்டைக்காயின் நற்குணங்கள்…

சுருக்கம்

வெண்டைக்காயின் வழ வழ கொழ கொழாவுக்குக் காரணம் அதில் இருக்கும் கம் (gum) மற்றும் பெக்டின் (pectin). இவை இரண்டும் ஜாம் மற்றும் ஜெல்லி களில் அவை கெட்டி படுவதற்காக பயன்படுத்தப் படுகின்றன. ஆப்பிள், ஆரஞ்சு பழங்களின் மேல் தோலில் பெக்டின் காணப்படுகிறது. இவையிரண்டும் சொல்யுபில் பைபர் (soluble fiber) அதாவது கரையக் கூடிய நார்சத்து. இவை சீரம் கொலஸ்ட்ரால் (serum cholesterol) -ஐ குறைப்பதுடன் மாரடைப்பு நோய் வருவதையும் குறைக்கின்றன. 

வெண்டைக்காயில் பாதிக்கு மேல் சொல்யுபில் பைபர் இருக்கிறது. மறு பாதியில் இன் சொல்யுபில் பைபர் (insoluble fiber) அதாவது உணவு செரிமானத்திற்கு பின் கரையாதது. இந்த வகை நார் சத்து குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. மலக்குடலில் உண்டாகும் புற்று நோய் வராமல் காக்கிறது.

வெண்டைக்காயில் இருக்கும் உயர்ந்த வகை நார் சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது. வெண்டைக் காயில் இருக்கும் கம் (gum) கொலஸ்ட்ராலை கட்டுப் படுத்தி பித்த அமிலத்தால் எடுத்து செல்லப்படும் நச்சுப் பொருட்களை வடிகட்டவும் உதவுகிறது.

வெண்டை காயில் இருக்கும் கொழ கொழ சத்து குடலுக்கு இதத்தை அளிப்பதுடன், வேண்டாத கழிவுகளை வெளியேற்றவும் உதவி செய்கிறது.

மேற் சொன்ன செயல்களைப் புரிவதால் இந்த அற்புதமான காய் பல நோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கிறது. எந்த விதமான நச்சுப் பொருட்களும் இதில் இல்லவே இல்லை. சாப்பிடுவதால் பக்க விளைவுகளும் கிடையாது. சுலபமாக குறைந்த விலையில் கிடைக்கிறது.

நம் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா கிருமிகளையும் ஊக்குவிக்கிறது.

இதில் இருக்கும் போஷாக்குகள் முழுவதும் நமக்குக் கிடைக்க வேண்டுமானால் இதை கொஞ்சமாக சமைக்க வேண்டும். மிதமான தீயில் அல்லது ஆவியில் வேகவைப்பது நல்லது. சிலர் இதனைப் பச்சையாகச் சாப்பிடுகிறார்கள்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இரவு ஒரு இளம் வெண்டை காயை நீரில் ( மேல் அடிக் காம்புகளை நீக்கிவிட்டு)ஊறப் போட்டு அதிகாலை எழுந்தவுடன் அந்நீரைக் குடித்துவிட்டு காயையும் மென்று தின்ன வேண்டும். தொடர்ந்து செய்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.

அசிடிட்டி இருப்பவர்கள் தினமும் 6 வெண்டைக் காய்களை சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி குறையும்

PREV
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!