பற்களை நல்லா வெச்சிக்க இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது…

 
Published : Jul 11, 2017, 01:09 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
பற்களை நல்லா வெச்சிக்க இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது…

சுருக்கம்

Its good to avoid these foods to get rid of the teeth ...

பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தைப் பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருக்கும்.

சில உணவுப் பொருட்கள் பற்களின் ஆரோக்கியத்தை வெகு விரைவாக சீர் குலைத்து விடும். அந்த உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

அந்த உணவுகள் இதோ…

சாக்லேட்

அனைவருக்குமே சொக்லேட் மிகவும் பிடிக்கும். சொக்லேட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதில் உள்ள இனிப்பு பற்களில் கிருமிகள் மற்றும் பக்டீரியாக்களை தங்க வைக்கும். ஆகவே அதனை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதை சாப்பிட்டப் பின் பற்களை மறக்காமல் பிரஷ் செய்துவிட வேண்டும்.

சீஸ்

உணவுகளில் வித்தியாசமான சுவைக்காக சேர்க்கும் பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். இதனை சேர்ப்பதால் அந்த உணவை சாப்பிடும் ஆர்வம் அதிகரிக்கும். அவ்வாறு சேர்க்கும் சீஸை சாப்பிடும் போது அவை பற்களில் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தை ஆக்குவதோடு, வாய் துர்நாற்றத்தையும் உண்டாக்குகிறது.

பாப்கார்ன்

பாப்கார்ன் பற்களுக்கிடையே மாட்டிக் கொள்ளும். அதனை நீக்குவது என்பது கடினமானது. ஆகவே அதனை நீக்க டென்டல் ப்ளாஸ் (dental floss) தான் பயன்படுத்த வேண்டும்.

பிரட்

அதிகமான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ள பிரட் கூட பற்களில் மாட்டும் உணவுப் பொருட்களில் ஒன்று. இது வறட்சியுடன் இருப்பதால், ஈறுகளில் மாட்டிக் கொண்டு, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நூடுல்ஸ்

நூடுல்ஸ் என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இதனை எந்த நேரத்தில் கொடுத்தாலும் சாப்பிடுவோம். அத்தகைய நூடுல்ஸ் கூட பற்களில் மாட்டிக் கொண்டு, நீண்ட நேரம் இருந்தால் பக்டீரியாவை அதிகரிக்கும்.

PREV
click me!

Recommended Stories

Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு
Healthy Hair : இந்த உணவுகள் '40' வயசுக்கு பின் முடி உதிர்தலை அதிகரிக்கும்; எதை சாப்பிடக் கூடாது தெரியுமா?