இந்த உடல் உறுப்புகளுக்கு இந்த உணவுகளைச் சாப்பிட்டால் ரொம்ப நல்லது…

Asianet News Tamil  
Published : Sep 15, 2017, 01:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
இந்த உடல் உறுப்புகளுக்கு இந்த உணவுகளைச் சாப்பிட்டால் ரொம்ப நல்லது…

சுருக்கம்

It is very good to eat these foods to these organs.

உடலின் அனைத்து உறுப்புகளும் திறம்பட இயங்கினால்தான் நம்மால் அன்றாட வேலைகளை சிறப்பாகச் செய்ய முடியும். ஒவ்வொர் உறுப்பையும் பாதுகாக்க, தனிக் கவனம் எடுப்பது நல்லது.

இதயம் – தக்காளி

சாம்பார், ரசம், புளிக்குழம்பு என நம்முடைய அன்றாட உணவுகளில் தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகொண்ட தக்காளியில் சத்துக்கள் ஏராளம். லைக்கோபீன் (Lycopene) என்ற நிறமிதான், தக்காளியின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்துக்கு நன்மை விளைவிக்கிறது.

கெட்ட கொழுப்பு குறைவதால், தமனிகளில் (Arteries) அடைப்புகள் ஏற்படாது. லைக்கோபீன், சில வகை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. உணவில் தக்காளியை அதிக அளவில் சேர்த்துக் கொண்டவர்களின் இதயம் பலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை சில ஆய்வுகள் ஊறுதிசெய்திருக்கின்றன.

சிவப்பு நிறப் பழங்களையும் காய்களையும் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியம் பெறும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இதயம் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

மார்பகம் – ஆரஞ்சு

பெண்களின் மார்பக வடிவில் அமைந்திருக்கிறது ஆரஞ்சுப் பழம். சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களில் உள்ள லிமோனாட்ய்ட்ஸ் (Limonoids) புற்றுநோய் செல்களை வளரவிடாது.

சிட்ரஸ் பழங்களில் தினமும் ஒன்றைச் சாப்பிட்டுவந்தால், புற்றுநோய்க்கான வாய்ப்பு குறையும். மார்பகச் செல்களின் ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயத்தில் படிந்த கெட்ட கொழுப்புகளை அகற்றும்.

சுவாசம் தொடர்பான நோய்கள், சில வகைப் புற்றுநோய்கள், அல்சர், மூட்டுநோய், சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

சிட்ரஸ் நிறைந்த பழங்களை இயற்கையான ஆன்டி-கார்சினோஜென் (Anti-carcinogen) எனச் சொல்லலாம். தினமும் சாப்பிட்டுவர, புற்றுநோய் வரும் ஆபத்துகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.

நுரையீரல் – திராட்சை

திராட்சைக் கொடியில் தொங்கும் திராட்சைப் பழத்தைப் பார்த்தால், திராட்சைக் கொத்து நுரையீரல் போலவும், அதில் உள்ள ஒவ்வொரு திராட்சையும் ஆல்வியோலி எனப்படும் நுண்காற்று அறைகள் போலவும் தோன்றும்.

ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடைச் சுத்திகரித்து, சுவாசக் காற்றில் உள்ள ஆக்சிஜனைப் பிரித்து, ரத்த அணுக்களில் நிறைத்து அனுப்புகிறது நுரையீரல். இந்தச் செயல்பாட்டை மேம்படுத்தும் திறன், திராட்சைப் பழத்துக்கு உண்டு. நுரையீரலில் வரக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் திராட்சைக்கு உண்டு.

கர்ப்பிணிகள் திராட்சையை 23-வது வாரத்தில் இருந்து சாப்பிட்டுவந்தால், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். திராட்சையில் உள்ள ப்ரோஆந்தோசயனிடின் (Proanthocyanidin) ஆஸ்துமா பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கும்.

திராட்சையில் உள்ள பாலிபீனால் நுரையீரல், வாய், சுவாசப் பாதை, மூச்சுக்குழாய், கணையம் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.

காது – காளான்

காதுகளில் காக்லியா (Cochlea) எனும் கேட்கும் திறனுக்கான உறுப்பு வளர வைட்டமின் டி தேவை. அவற்றை காளானும் சூரிய ஒளியும் தரும். காளானில் வைட்டமின் டி, டி3, டி2 சத்துக்கள் நிறைந்துள்ளன. கால்சியம் சத்தை உடல் கிரகித்துக்கொள்ள வைட்டமின் டி உதவுகிறது.

உள்ளுறுப்புகளின் வளர்ச்சி, ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு ஆதாரமாக காளான் இருக்கிறது. மார்பகம், பிராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும். அதிகமாக ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சரி செய்யும். விலங்குகளிடமிருந்து பெறப்படும் புரதத்தை காளானிலிருந்தும் பெற முடியும்.

கண்கள் – கேரட், பாதாம்

பார்வைத்திறன் மேம்பட கேரட், பப்பாளி நல்ல பலனைத் தரும். கேரட்டை குறுக்காக வட்ட வடிவில் வெட்டினால், கண்ணின் (Pupil, iris) தோற்றத்தைப் போல இருக்கும். தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால், கண்களில் புரை உருவாவது தடுக்கப்படும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன், வயதாகும்போது வரும் பார்வைக்குறைபாடுகளை (Macular degeneration) தடுக்கும்.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்னைகள் வராது. கண்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். அதுபோல், பாதாமின் தோற்றம், கண்களின் வெளிப்புற அமைப்பைப் போலவே இருக்கும். கண்களுக்கு நன்மையைச் செய்யக்கூடிய சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளன. கண் மை தயாரிப்புக்கு பாதாம் முக்கிய பொருள். தினமும், நான்கைந்து பாதாமை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது.

மூளை – வால்நட்

வால்நட்டின் வடிவத்தைக் கவனித்திருக்கிறீர்களா? மூளையின் மினியேச்சர் போலவே இருக்கும். அக்ரூட்டை பிரெய்ன் ஃபுட் (மூளை உணவு) என்பார்கள். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் மூளையின் செயல்பாட்டுக்கும், சீரான இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது.

குழந்தைகள், பள்ளி செல்லும் பிள்ளைகள், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று வால்நட். அறிவுத்திறன் (ஐ.க்யூ) மேம்படவும், படைப்பாற்றல் அதிகரிக்கவும் உதவும்.

சமீப ஆய்வுகளில், வால்நட்டில் புரதச்சத்துக்கள் இருப்பதால், மறதி நோய் வராமல் தடுக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் இரண்டு மூன்று அக்ரூட் சாப்பிட்டுவந்தால், மூளை செல்கள் புத்துயிர் பெறும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake