இந்த மூன்று காய்கறிகளை சாப்பிடுவது உடலுக்கு அவ்வளவு நல்லது. ஏன் தெரியுமா?

 
Published : Apr 07, 2018, 12:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
இந்த மூன்று காய்கறிகளை சாப்பிடுவது உடலுக்கு அவ்வளவு நல்லது. ஏன் தெரியுமா?

சுருக்கம்

It is good for the body to eat these three vegetables. Why do you know

1.. காலிபிளவர்

காலிபிளவரில் விட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. 

வயிறுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் புற்றுநோயையும் கட்டுப்படுத்துகிறது. இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது, மூலத்தை கட்டுப்படுத்துகிறது, 

மலச்சிக்கலைப் போக்கும். பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் வாயுத் தொந்தரவிலிருந்து பாதுகாக்கிறது, அத்துடன் உடல் எடையை அதிகரிக்காமல் கட்டுக்கோப்புடன் இருக்க உதவுகிறது. 

இந்தப் பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

2.. பூண்டு

பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. வெள்ளையணுத்திறனின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது, ஊளைச் சதையைக் கரைக்கும். 

கொலஸ்ட்ரால் குறைக்க, நச்சுக்களை போக்க, இதய நலனை காக்க என பல வகைகளில் நன்மை விளைவிக்கிறது. ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து, பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும். 

எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.

3.. முட்டைக்கோஸ்

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது. 

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைக்கோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.
 

PREV
click me!

Recommended Stories

Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி
Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்