விரல்களில் மருதாணி வைப்பதால் இவ்வளவு பயன்கள் கிடைக்குதா? இது தெரியாமே போச்சே...

Asianet News Tamil  
Published : Dec 15, 2017, 02:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
விரல்களில் மருதாணி வைப்பதால் இவ்வளவு பயன்கள் கிடைக்குதா? இது தெரியாமே போச்சே...

சுருக்கம்

Is it possible to get the henna in the fingers? Do not know this ...

மருதாணி 

இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதாணி பூசுவது ஏன்?

கை விரல்களில் மருதோன்றி பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகளைக் கொன்று விடுகிறது. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் தடுக்கப் படுகின்றன. உடல் சூட்டை குறைத்து விடுகின்றன. மேலும் மனக்குழப்பத்தைத் தவிர்கின்றன.

மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதா‌ணி இலையை கைக‌ளி‌ல் வை‌ப்பதா‌ல் ப‌ல்வேறு பய‌ன்களை பெ‌ண்க‌ள் பெறு‌கிறா‌ர்க‌ள்.

இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். ஒரு 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர்.

மருதாணியின் பயன்கள்

** மருதா‌ணி இலையை அரை‌த்து கைககளு‌க்கு வை‌த்து வர, உட‌ல் வெ‌ப்ப‌ம் த‌ணியு‌ம்.

** கைகளு‌க்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு வர மனநோ‌ய் ஏ‌ற்படுவது குறையு‌ம்.

** ‌சிலரு‌க்கு மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ண்டா‌ல் ச‌ளி ‌பிடி‌த்து ‌விடு‌ம். இத‌ற்கு மருதா‌ணி இலைகளை அரை‌‌க்கு‌ம் போது கூடவே 7 அ‌ல்லது 8 நொ‌ச்‌சி இலைகளை சே‌ர்‌த்து அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

** மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த பய‌ன்க‌ள் எ‌ல்லா‌ம் த‌ற்போது கடைக‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் மருதா‌ணி கோ‌ன்க‌ளி‌ல் ‌கிடை‌க்க வா‌ய்‌ப்பே இ‌ல்லை எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்க.

** சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் காண‌ப்படு‌ம். இத‌ற்கு ந‌ல்ல கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது.

** மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்து அரை‌த்து பூ‌சி வர ‌விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல் மறையு‌ம்.

** மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake