பசியின்மையால் சிரமமா? இந்த உணவுப் பழக்கவழக்கத்தை கடைப்பிடித்து பாருங்களேன்…

 
Published : Jul 24, 2017, 01:12 PM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
பசியின்மையால் சிரமமா? இந்த உணவுப் பழக்கவழக்கத்தை கடைப்பிடித்து பாருங்களேன்…

சுருக்கம்

Is it anxiety? Take a look at this dietary habit ...

ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் `பசியின்மை’. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே…

* நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாக சேர்த்து சாப்பிடுங்கள்.

* சமைக்கும் உணவு சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பி சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறிகளானாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்து சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்லது விதவிதமாக சமைக்கும் அனுபவமுள்ளவரின் உதவியை நாடுங்கள்.

* உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களை சார்ந்திருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பல வியாதிகள் ஏற்படும். சராசரியான உடல் எடையை மேலாண்மை செய்வது உடல் நலத்திற்கும், உணவு பழக்க வழக்கத்திற்கும் நல்லது.

* உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாக சாப்பிடுவதுதான் சரியான நேரத்திற்கு பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாக சாப்பிடுவதும், மற்ற உணவுகளை தேவையைவிட குறைவாக எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு தரும். இது பசியின்மையையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

* சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவைத்துப் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி புதிய உணவுகளை சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசிப்பதில் பிரச்சினைகள் வரலாம். வழக்கமான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதான ஜீரணத்திற்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.

* சேர்க்க வேண்டிய உணவுகளை சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்ப்பதும் சிறப்பான உணவுப் பழக்கமாகும். உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உணவு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளை சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத் தீனி போன்ற உணவுகளை குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.

* எல்லா உணவுகளும் அவசியமானதும், சத்தானதும் அல்ல. ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும். அதேபோல ஒரு சத்தான உணவை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கும் பக்க பலமாக இருக்க வேண்டுமல்லவா!

PREV
click me!

Recommended Stories

Holding in Gas : வாயுவை அடக்கி வைக்கும் நபரா? அடிக்கடி அடக்கினால் 'உடம்புக்கு' என்னாகும் தெரியுமா?
Fish Eggs Benefits : மீனை விட 'மீன் முட்டை' ரொம்ப நல்லதாம்!! ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடவே கூடாது