பாசிப்பயறை இப்படி பயன்படுத்தினால் சருமம் பளபளவென மின்னும்... ஆண்கள் கூட பயன்படுத்தலாம்...

 
Published : May 12, 2018, 01:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
பாசிப்பயறை இப்படி பயன்படுத்தினால் சருமம் பளபளவென மின்னும்... ஆண்கள் கூட பயன்படுத்தலாம்...

சுருக்கம்

If you use the nutrients the skin will shine brightly

பாசிப்பயறு 

பாசிப்பயறு சத்தான பயறு வகைகளில் ஒன்றாகும்.  இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட்,சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது: 

கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வயிறுக்கோளாறுகள் 

வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம். காய்ச்சல் குணமாகும்: சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம்.

நினைவுத்திறன் கூடும்: 

மணத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும்.

ஆசன வாய்க் கடுப்பு, மூலம் 

ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும். பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும்.

அழகுசாதனப் பொருள்: 

குளிக்கும்போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்தால் ஆண், பெண் இருவருக்கும் சருமம் அழகாகும். 

பொடுகுத் தொல்லை:

தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.


 

PREV
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!