இந்த மாதிரியான உணவை தினமும் சாப்பிட்டால் உடல்நலம் மிகவும் மோசமாகும்...

 
Published : May 16, 2018, 01:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
இந்த மாதிரியான உணவை தினமும் சாப்பிட்டால் உடல்நலம் மிகவும் மோசமாகும்...

சுருக்கம்

If you eat this type of food daily health is very bad ...

நம்மில் பலரும் தினமும் ஒரே வகையான உணவுகளைத் தான் சாப்பிடுகிறோம். அப்படி சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

அதிலும் பலருக்கும் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி போன்றவற்றை அன்றாடம் சிறிது சாப்பிட்டாலும், அது உடலினுள் குறிப்பிட்ட வகையான புழுக்களை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

இறைச்சிகளின் மூலம் உடலினுள் நுழையும் புழுக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் அவை உடலினுள் நுழைந்த பின், மெதுவாக திசுக்கள், கண்கள் மற்றும் ஏன் மூளைகளில் கூட நுழைந்து தீங்கை உண்டாக்கும்.

அட்டென்புரூக்ஸ் மருத்துவமனை கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள அட்டென்புரூக்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ குழுவினர், ஒரு நோயாளி கடுமையான தலைவலியுடன் தங்களது மருத்துவமனைக்கு ஒருமுறை வந்ததாக கூறினர்.

மறுமுறை அதே நோயாளி சில நாட்கள் கழித்து மீண்டும் ஏதோ சில சோதனைக்காக வந்திருந்தார். அப்போது அவர் வேறு சில புதிய அறிகுறிகள் தென்படுவதாக புகார் அளித்தார்.

ஸ்பைரோமெட்ரா எரினாசியூரோபை மேலும் இந்த நோயாளி சமீபத்தில் சீனா, தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளுக்கு சென்று வந்ததாக கூறினார். இவர் சென்று வந்த நாடுகளில் தான் ஸ்பைரோமெட்ரா எரினாசியூரோபை என்னும் ஒட்டுண்ணி அதிகம் பரவியிருப்பதாக சில வழக்குகள் இருப்பது மருத்துவர்களுக்கு தெரிய வந்தது.

சோதனை எனவே மருத்துவர்கள் இந்த நோயாளியின் உடலைப் பரிசோதித்து, அம்மாதிரியான ஒட்டுண்ணி உள்ளதா என்று சோதித்தனர். சில சோதனைகளின் முடிவில், இந்த நோயாளியின் உடலில் ஸ்பைரோமெட்ரா எரினாசியூரோபை என்னும் ஒட்டுண்ணி இருப்பது தெரிய வந்தது. 

உடனே மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் ஒட்டுண்ணியை வெளியேற்றி, அந்நோயாளியின் பிரச்சனையை சரிசெய்தனர்.

பின்குறிப்பு 

ஒருவரது உடலினுள் ஒட்டுண்ணி புழுக்களானது 2 வழிகளின் மூலம் நுழையும். அவையாவன: 

* ஒன்று மனிதனின் மலத்தின் மூலம் பரவும். 

* மற்றொன்று பாதிக்கப்பட்ட பன்றி அல்லது மாட்டு இறைச்சியை நன்கு வேக வைக்காமல் சாப்பிடுவது. 

எனவே மக்களே எப்போது இறைச்சிகளை சாப்பிடுவதாக இருந்தாலும், அவற்றை சுத்தமாக கழுவி, நன்கு வேக வைத்து பின் சாப்பிடுங்கள்.
 

PREV
click me!

Recommended Stories

Holding in Gas : வாயுவை அடக்கி வைக்கும் நபரா? அடிக்கடி அடக்கினால் 'உடம்புக்கு' என்னாகும் தெரியுமா?
Fish Eggs Benefits : மீனை விட 'மீன் முட்டை' ரொம்ப நல்லதாம்!! ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடவே கூடாது