அதிக பருமன் உள்ளவர்கள் இந்த தக்காளியை சாப்பிட்டால் உடல் எடை விரைவில் குறையும்...

 
Published : May 04, 2018, 12:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
அதிக பருமன் உள்ளவர்கள் இந்த தக்காளியை சாப்பிட்டால் உடல் எடை விரைவில் குறையும்...

சுருக்கம்

If you are eating too much the body weight will soon decrease.

மிக குறைந்த விலையில் எளிதாக கிடைக்கக்கூடிய தக்காளி அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது.

தக்காளியினை நம் உணவில் சேர்த்து கொள்வதால் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை கூட தவிர்க்க முடியும்.

தக்காளியில் காணப்படும் லைகோபீன் என்னும் நிறமியானது அதன் சிவப்பு நிறத்திற்கு காரணமாகும். இந்த லைகோபீன் புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கும் தன்மையினை உடையது.

இது உடலில் உள்ள நச்சினை வெளியேற்றி புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படும். மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் விரைவில் சருமம் முதிர்ச்சி அடையாமல் தடுக்கிறது.

புரோஸ்டேட் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள் தக்காளியினை சாப்பிட்டு வந்தால் நோயின் தீவிரம் குறையும்.

வாரம் ஒன்றரை கிலோ தக்காளியினை உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்ப்பு 20சதவீதம் குறைவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பெண்கள் உணவில் அதிகமாக தக்காளியினை சேர்த்து கொள்வதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பபை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றை தடுக்கலாம்.

தக்காளியில் ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டின், லூட்டின் போன்றவை நிறைந்துள்ளது. இவை நமது உடலினை நலமாக வைத்து கொள்ள உதவுகிறது.
தக்காளியின் தோலை நீக்காமல் சாப்பிடுவதால் குவர்சிடின், கேம்ப்ரோல் போன்ற பிளேவனாய்டுகள் கட்டிகள் மற்றும் வீக்கங்களுக்கு எதிராக செயல்படக் கூடியவை.

மேலும் இதில் உள்ள விட்டமின் ஏ கண்ணில் ஏற்படும் குறைபாட்டினை சரிசெய்யவல்லது. மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.

உடலுக்கு மட்டுமல்லாது சருமத்திற்கும் பாதுகாப்பினை அளிக்கக்கூடியது. தக்காளி சாற்றினை அரைத்து முகத்தில் தடவுவதால் எண்ணெய் பசை இன்றி சருமம் பொலிவாக இருக்கும்.

தக்காளி சாற்றுடன் சிறிது வெள்ளரி சாற்றினை சேர்த்து தேய்த்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள பொட்டாசியமானது பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

உடல் பருமன் உடையவர்கள் பழுத்த தக்காளியினை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் எடையினை குறைக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க