முகத்தில் அசிங்கமாக தெரியும் சுருக்கங்களை போக்க இதோ டிப்ஸ்...

Asianet News Tamil  
Published : Feb 14, 2018, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
முகத்தில் அசிங்கமாக தெரியும் சுருக்கங்களை போக்க இதோ டிப்ஸ்...

சுருக்கம்

Here are tips to get rid of the ugly faces.

முகச்சுருக்கத்தை நீக்க எளிமையான சில குறிப்புகள்

** சந்தனப்பவுடருடன் பன்னீர், கிளிசரின் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு இரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.

** புளிவாழைப்பழத்தை பிசைந்து அதனுடன் பயத்தம் மா போன்றவற்றை கலந்து முகத்தில் தேய்க்க முகம் பொலிவு பெறும் .

** பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம்.

** ஆரஞ்சு தோலை நன்றாக காயவைத்து அதை அரைத்து மாவாக்கி பெஸ்ட் போல் பயன்படுத்தலாம் இவ்வறு ச்ய்தால் முகம் சுருக்கம் நீங்கும் முக பொலிவும் பெறும்.

** ஓட்ஸ் மாவுடன் சந்தனப் பவுடர் மற்றும் பால் கலந்தோ அல்லது வெள்ள விதையை நன்றாக அரைத்து அத்துடன் பன்னீர் கலந்தோ முகத்தில் பூச சுருக்கம் மறையும்.

** அதிகமாக கோபப்படுபவர்களுக்கு விரைவிலேயே சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக, சில தகவல்கள் தெவிக்கின்றன. எனவே கோபப்படுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake