இந்த எளிய வழிமுறைகளைச் செய்து பாருங்கள்- உடனடியாக ரத்தக் கொதிப்பு சராசரி நிலைக்கு வரும்..!!

By Dinesh TGFirst Published Sep 18, 2022, 2:06 PM IST
Highlights

இந்தியாவில் புதியதாக சக்கரை மற்றும் ரத்தக் கொதிப்பு பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சக்கரை நோய் பாதிப்பைப் போலவே, ரத்தக் கொதிப்பு பிரச்னை வந்த பின் தான் கண்டறிய முடியும். ஆனால் வந்துவிட்டால் உணவுக் கட்டுப்பாடு, உணர்வுக் கட்டுப்பாடு உள்ளிட்ட வாழ்க்கைக்கான ஒட்டுமொத்த கோட்பாடுகளும் மாறிவிடும். இன்றைய வாழ்க்கையில் ரத்தக் கொதிப்பு பிரச்னையை பெரிதாக எடுத்துக்கொள்ளாதவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால் ரத்தக் கொதிப்பின் அளவு அதிகமாக இருப்பதும், குறைவாக இருப்பதும் என இரண்டுமே ஆபத்து தான். சராசரியாக ரத்தக் கொதிப்பின் அளவு 120/80-அக இருக்க வேண்டும். ஒருவேளை இந்த அளவு குறைந்தால் மூளை, இருதயம், நுரையீறல் மற்றும் சிறுநீரகத்துக்கு பாதிப்பு ஏற்படும். நீங்கள் உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்று விரும்பினால், உங்களுடைய ரத்த கொதிப்பு அளவு சராசரியாக இருக்க வேண்டும். குறைவாக ரத்தக் கொதிப்பு அளவை கொண்டவர்கள், சில உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் ரத்தக் கொதிப்பை சராசரி அளவுக்கு கொண்டுவரலாம்.

காபி

நீங்கள் நீண்டநேரமாக எதுவும் சாப்பிடாமல் இருந்தால், ரத்தக் கொதிப்பு குறைய வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட நேரத்தில் உடனடியாக காஃபி குடியுங்கள். அதிலுள்ள கேஃபைன் உங்களுடைய ரத்தக் கொதிப்பின் அளவை கட்டுக்குள் கொண்டுவரும். குறைவான ரத்தக் கொதிப்பு அளவைக் கொண்டவர்களுக்கு, காஃபி உடனடி தீர்வாக அமையும்.

உப்பு

அதிகப்படியான ரத்தக் கொதிப்பு அளவைக் கொண்டவர்கள், அதிகளவு உப்பு உட்கொள்ளக் கூடாது. ஆனால் குறைவான ரத்தக் கொதிப்பு அளவு கொண்டவர்கள், உப்பு அளவை அதிகரிக்கலாம். எலுமிச்சம் பழத்தில் உப்பு கலந்து குடிப்பது, உடலுக்கு உடனடி ஆற்றை வழங்கும்.

பாதாம்

மனிதர்கள் பாதாம் எடுத்துக்கொள்வது அவர்களுடைய உடலுக்கு பல வகையில் நன்மை செய்கிறது. குறைந்தளவில் ரத்தக் கொதிப்பு கொண்டவர்கள் தினமும் பாதாம் சாப்பிடலாம். அதனால் அவர்களுக்கு ரத்தக் கொதிப்பு சீரான அளவுக்கு வருகிறது. குறைந்த ரத்தக் கொதிப்பு அளவை கொண்டவர்கள் கொதி நீரில் பாதாம் போட்டு வைத்துவிட்டு இரவு தூங்கச் செல்லுங்கள். காலையில் எழுந்ததும் பாதாம் கொட்டையை சாப்பிட்டுவிட்டு, ஊறவைத்த தண்ணீரையும் பருகுங்கள். இது ரத்தக் கொதிப்பை சராசரி நிலையில் வைத்திருக்க உதவும்.

தண்ணீர்

நமது உடலுக்கு தண்ணீர் அதிகளவில் தேவைப்படுகிறது. உடலில் தண்ணீர் அளவு குறைந்தாலும் ரத்தக் கொதிப்பின் அளவு குறையும். அதனால் தினசரி 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அப்போது தான் நமது உடலில் இருந்து துர்நீர் வெளியாகி, ஆரோக்கியம் கிடைக்கும். தேங்காய் தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
 

click me!